ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு   

ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு   

சென்னை: ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படமானது வரும் நவம்பர் 29 (வியாழன்) அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய செல்போன் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 

இந்த மனுவில், '2.0' படத்தில் செல்போன் பயன்பாடு குறித்து தவறாக சித்தரிப்பது போன்ற காட்சிகள்  இடம்பெற்றுள்ளது என்பது படத்தின் டீசரில்  தெரிகிறது. எனவே பொதுமக்களுக்குத் தவறான கருத்துக்களை பரப்பும் வாய்ப்பு இருப்பதால். '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. 

இந்த மனு தொடர்பாக  படத்தின் தயாரிப்புத் தரப்பு மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com