'சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  
'சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "சர்கார்". துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய், முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் கூட்டணி 4-ஆவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சர்கார் படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தான் எழுதியிருந்த 'செங்கோல்' என்னும் கதையே தற்போது விஜய் நடிப்பில் சர்கார் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

தனது கதையைத் திருடி ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார் 

அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வருமென்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com