கூத்துப் பட்டறை ந.முத்துச்சாமி மறைவுக்கு நடிகர்கள் விதார்த், விமல், பசுபதி நடனமாடி இறுதி அஞ்சலி!

கூத்துப் பட்டறை ந.முத்துச்சாமி மறைவுக்கு நடிகர்கள் விதார்த், விமல், பசுபதி நடனமாடி இறுதி அஞ்சலி!

கூத்துப் பட்டறை ந.முத்துச்சாமி மறைவுக்கு நடிகர்கள் விதார்த், விமல், பசுபதி நடனமாடி இறுதி அஞ்சலி!

கூத்துப் பட்டறை ந.முத்துச்சாமி நேற்று முன் தினம் உடல்நலக்குறைபாட்டால் காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் நவீன நாடக வடிவத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவரான ந.முத்துச்சாமியின் பட்டறையில் நடிப்பைக் கற்றவர்கள் பலர் இன்று தமிழ் சினிமாவில் பிரதான இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் பசுபதி, விமல், விதார்த் மட்டும் கலைராணியை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய் சேதுபதி கூத்துப் பட்டறையில் ஒரு கணக்காளராக பணிபுரிந்த போதும் அவருக்குள்ளிருந்த நடிகனை வெளிக்கொண்டு வந்தவர் நா.முத்துச்சாமி தான் என விஜய் சேதுபதியே தனது நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமியின் வாழ்க்கையை நினைவு கூரத்தக்க விதத்திலும் அவருடன் விஜய் சேதுபதியின் உறவு குறித்தும் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தத் தக்க விதத்திலும் நாசருக்கான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நாசரின் கதாபாத்திரம் வெளிப்படுத்தியது கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமியின் நாடக அர்ப்பணிப்பு உணர்வுகளைத்தான்.

நடிகர்கள் பசுபதி, விஜய் சேதுபதி, விமல், விதார்த், கலைராணி தவிர்த்து மேலும் பல திறமையான நடிகர், நடிகைகளை உருவாக்கித் தந்திருக்கிறது கூத்துப்பட்டறை. 

நடிகர்கள் நடிப்பதற்கான பயிற்சியை இப்படியான கூத்துப்பட்டறை மூலமாக முழுமையாகக் கற்றுக் கொண்டு வெளியேறி அதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு திரைப்பட வாய்ப்புகளைப் பெற முயற்சித்தால் மட்டுமே அவர்களது நடிப்பு மெருகேறியதாக இருக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர் கலைஞர் நா.முத்துச்சாமி.

தனது வாழ்நாள் முழுமையையும் நாடகக் கலைக்காக அர்ப்பணித்தவரான நா.முத்துச்சாமிக்கு அவரது கூத்துப்பட்டறை மாணவர்களான நடிகர்கள் விதார்த், விமல், பசுபதி, உள்ளிட்டோர் நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

தங்களது நாடக குருவுக்கு தாங்கள் செய்யும் கலாப்பூர்வமான இறுதி அஞ்சலியாக இந்த நடனத்தை அவர்கள் கருதுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com