வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

செலவு செய்யத் தயாரா?: அடுத்தடுத்து வெளியாகும் நான்கு பெரிய படங்கள்!

By எழில்| DIN | Published: 12th September 2018 12:45 PM

 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரவுள்ளன. நாளை சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா வெளியாகிறது. அடுத்த வாரமே ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மணி ரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் செப்டம்பர் 27-ல் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படம் அக்டோபர் 4 அன்று வெளியாகவுள்ளது.

இப்படி அடுத்த நான்கு வாரங்களும் பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளிவரத் திட்டமிட்டுள்ளன. ஒவ்வொரு பெரிய நடிகரின் படங்களுக்கும் குறைந்தபட்சம் இரு வாரங்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்று திரையுலகினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இந்த நான்குப் பெரிய படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. இதனால் இந்தப் படங்களின் வியாபாரத்துக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது வரும்வாரங்களில்தான் தெரியவரும்.

அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்கள்

சீமராஜா - செப்டம்பர் 13
சாமி - செப்டம்பர் 20
செக்கச் சிவந்த வானம் - செப்டம்பர் 27
96 - அக்டோபர் 4.
 

More from the section

96 படம் உருவான கதை! மனம் திறக்கிறார் இயக்குநர் பிரேம்! (விடியோ)
'சீமராஜா’ இயக்குநர் பொன்ராம் பேட்டி
சூர்யா தயாரிக்கும் உறியடி 2
சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் பட டீசர் வெளியீடு!
'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!