மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளிவரவுள்ளது.
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருப்பவர் டயானா எரப்பா. 2016-ம் வருடம் மிஸ் இந்தியா போட்டியில் 2-ம் இடம் பிடித்த டயானா, மேடை நாடகங்களில் நடித்து வருபவர். மாடலிங்காகவும் தொடர்ந்து விளம்பரங்களில் பங்கேற்று வருகிறார். கூர்க் பகுதியைச் சேர்ந்த டயானா நடிக்கும் முதல் படம் இது.