ஆஸ்கர் வென்றாலும் உங்கள் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரஹ்மானை மெச்சிய மகள்!

நீங்கள் மற்றவர்களுக்குத் தெரியாதவாறு நிறைய சமூகச் சேவைகள் செய்கிறீர்கள். இது நான் உங்களிடம்...
ஆஸ்கர் வென்றாலும் உங்கள் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரஹ்மானை மெச்சிய மகள்!

ஸ்லம்டாக் மில்லினியர் படம் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அனில் கபூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ரஹ்மானின் மகள் கதிஜாவும் கலந்துகொண்டார். அந்த விழாவில் தனது தந்தையைப் புகழ்ந்து கதிஜா பேசியதாவது:

உங்களுடைய இசையை வைத்து, நீங்கள் பெற்ற விருதை வைத்து உலகுக்கு உங்களைப் பற்றித் தெரியும். ஆனால் உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கக் காரணம், நீங்கள் எங்களுக்குக் (3 குழந்தைகளுக்கும்) கற்பித்த நன்மதிப்புகள்தான். உங்களுடைய தன்னடக்கம் எனக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஆஸ்கர் வென்றது முதல் உங்கள் குணத்தில் அணு அளவிலும் மாற்றம் இல்லை. எங்களிடம் செலவழிக்கும் நேரம் குறைந்ததைத் தவிர கடந்த 10 வருடங்களில் உங்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு ஈடாக இப்போது சிறிய சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் ஊக்கமாக உள்ளது. நீங்கள் மற்றவர்களுக்குத் தெரியாதவாறு நிறைய சமூகச் சேவைகள் செய்கிறீர்கள். இது நான் உங்களிடம் அதிகம் போற்றும் குணம் என்று பேசினார். 

உங்கள் குழந்தைகளுக்கும் இளைஞர்களும் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன என்று கதிஜா ரஹ்மானிடம் கேட்டார். அதற்கு சிறிது நேரம் யோசித்து பிறகு ரஹ்மான் கூறியதாவது: நான் யாருக்கும் அறிவுரைகள் கூறுவதில்லை. என் தாய் நான் வளரும்போது எனக்கு என்ன சொல்லித் தந்தாரோ அவற்றை நீங்கள் மூன்று பேரும் வளரும்போது கற்றுத்தர வேண்டும் என எண்ணினேன். இப்போது உங்களுடைய மனம் மற்றும் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைப் பின்தொடருங்கள். இறைவனை வேண்டுங்கள், அவர் உங்களை வழிநடத்துவார். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதுதான் உங்களை வழிநடத்தும் சிறந்த கருவி என நினைக்கிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com