தினமும் டிவி சீரியல்கள் பார்ப்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குத்தான் (விடியோ)

நீண்ட நாள் கழித்து இரண்டு நண்பர்கள் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?எப்படி இருக்கே என்பதில் தொடங்கிய நலம் விசாரிப்புக்கள்,
தினமும் டிவி சீரியல்கள் பார்ப்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குத்தான் (விடியோ)

நீண்ட நாள் கழித்து இரண்டு நண்பர்கள் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?எப்படி இருக்கே என்பதில் தொடங்கிய நலம் விசாரிப்புக்கள், குடும்பம், ஆரோக்கியம் என்பதை தொடர்ந்து, பிள்ளைகள், படிப்பு என்பதை தொட்டுவிட்டு, கடைசியில் என்ன சினிமா பார்த்தே என்றுதான் முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு சினிமாவை திரை அரங்கிற்குச் சென்று பார்க்கும் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், அந்த மெகா சீரியல் பார்க்கறியா, அதுல ஒரு காட்சி என் வாழ்க்கையிலேர்ந்து அப்படியே படம் பிடிச்சுக் காட்டின மாதிரி இருந்துச்சு’ என்று சொல்லும் அளவிற்கு நெடுந்தொடர்களின் ஆதிக்கம் நம் வாழ்க்கையில் ஒன்று கலந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஆகிவிட்டன.

சின்னத்திரையை பார்க்கிறோமோ இல்லையோ வீட்டில் அது தன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். சிலருக்கு செய்திகள், சிலருக்கு பாடல்கள், ஆனால் பெரும்பாலோருக்கு சீரியல்தான் ஒரே வடிகால். அட்டவணை போட்டு சீரியல்களைப் பார்க்கும் பெண்கள் உண்டு. அதற்கேற்றாற் போல் எல்லா சானலும் போட்டி போட்டுக் கொண்டு சினிமாவுக்கு இணையாக சீரியல்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதில் மொழியாக்கத் தொடர்களை வேறு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் டப் செய்து ஒளிபரப்பி அனேக ரசிகர்களை அடைந்து தங்களின் இலக்கான டி ஆர் பி ரேட்டிங்கை  அடைந்து வருகிறார்கள்.

நெடுந்தொடர்கள் பார்க்கலாமா வேண்டுமா என்பது அவரவர் தேர்வும், அவரவர் நேரம் பொருத்துதான். அதை பார்ப்பது நேர விரயம் என்று சொல்பவர்கள், விமரிசனம் செய்பவர்கள் உள்ளனர். ஆனால் அத்தகைய தொடர்கள் தான் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பல பெண்களுக்கு வெளிச்சமாக, உலகைப் பார்க்கும் ஒரு ஊடகமாக உள்ளது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். அத்தனை பேர் பார்ப்பதால் தான் இத்தனை சீரியல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதில் தவறு எது சரி எது என்று நிர்ணயிக்க நாம் யார்? மேலும் ஒரு விஷயத்தை வேண்டுமானால் நாம் வேண்டுகோளாக வைக்கலாம். இத்தகைய தொடர் எடுப்பவர்களிடம் எதிர்மறையான விஷயங்களை தவிர்த்து நேர்மறையான விஷயங்களை அதிகளவில் எடுங்கள் என்று கூறலாம். ஆனால் ஒரு பாஸிட்டிவ்வான கதாபாத்திரத்தை வெளிக் கொண்டு வர, சில நெகட்டிவ்வான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் தேவைப்படுகிறது.

நீங்கள் ஒரு சானலில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பார்த்து ரசித்து சலித்த நெடுந்தொடர், வேறு ஒரு பெயரில் வேறு ஒரு சானலில் அதே கதையுடன் களமிறங்கி விடும். சில பல வாரங்கள் கழித்துதான் நீங்கள் உணர்வீர்கள், இதை எங்கேயோ பார்த்தது போலுள்ளதே என. ஆனாலும் பார்க்கத் தொடங்கிவிட்டால், நம்மை விடாது கருப்பு என்பது போல், அது ஒரு மகா சமுத்திரம் நீங்கள் ஒரு முறை முங்கி விட்டால் அவ்வளவுதான் முழுக்க நனைந்து திளைக்க வேண்டியதுதான். 

மெட்டி ஒலி, கோலங்கள், லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள பாஸ்கர் சக்தியிடம் தினமணி டாட் காம் குழு கேட்ட கேள்விகளுக்கு அவர் நேர்மையாகக் கூறிய பதில்கள் விரைவில் சந்திப்போமோ என்ற பகுதியில் வெளிவரும். அதற்கான முன்னோட்டம் இது:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com