ஆஸ்கர் என்பது இந்திய சினிமாவுக்கு எட்டாத கனிதானா? இந்த நிலை மாறுமா?

திரைத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆஸ்கர் என்பது இந்திய சினிமாவுக்கு எட்டாத கனிதானா? இந்த நிலை மாறுமா?

திரைத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 91-வது ஆஸ்கர் விருதினை வழங்கும் விழா பிப்ரவரி 25-ம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அந்நிகழ்வில் சிறந்த திரைப்படம், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளில் திரைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். 

2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டது. ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் திரையிடப்பட்ட விழாக்களில் விருதுகளைக் குவித்து வருகிறது. இந்திய கிராமங்கள் எல்லாமே ஒரே மாதிரியானதாக உள்ளதா, அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் கடைகோடி மனிதருக்குச் சென்று சேருகிறதா என்றும் அம்மக்களின் வாழ்க்கைமுறை என்ன, முன்னேற்றம் என்பது கனவுதானா உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பு, அதற்கான பதில்ககளைத் தருவதுதான் ராக்ஸ்டார்ஸ் படத்தின் மையக் கதை. ரிமா தாஸ் இப்படத்தை இயக்கியதுடன் இல்லாமல், இப்படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே அவர்தான்.   

ஆஸ்கர் பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட பிற படங்கள் ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா உள்ளிட்ட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவர்றில் எந்த திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பலாம் என விருதுக் குழு பரிசீலனை செய்து, அதன் முடிவில் இதுவரை 4 தேசிய விருதுகளைப் பெற்ற அஸ்ஸாமிய மொழித் திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படம் ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. 2000-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படம் ஆஸ்கருக்கு அனுப்பபட்டது. அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டில் ‘லகான்' திரைப்படம் முதன்முறையாக முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியான சிறப்பான படங்களை ஆஸ்கருக்கு அனுப்பவுதம் அவரை தேர்வு செய்யப்படாமல் போவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்ட நிலையில், இந்தியாவின் ஆஸ்கர் கனவை வருங்காலங்களிலாவது நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com