இயக்குநர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் போட்டி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் போட்டி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல், வரும் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ரத்தன் கணபதி, சி.வி.வித்யாசாகர், எஸ்.பி.ஜனநாதன், அமீர் உள்ளிட்ட 5 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் சங்கத் தேர்தல் விதி எண் 20-ன்படி , எஸ்.பி.ஜனநாதனுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார்.
 இதையடுத்து, தேர்தல் அதிகாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி, போட்டியிலிருந்து விலகுவதாக இயக்குநர் அமீர் அணி அறிவித்துள்ளது.
 இறுதி பட்டியல்: இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் இருவரும் போட்டியிட உள்ளனர்.
 போட்டியின்றி தேர்வு: சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால், ஆர்.வி. உதயகுமார் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
 இதேபோல், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com