செய்திகள்

ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!

எழில்

விஜய் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள உறியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்கியதோடு மட்டுமல்லாமல் இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். சுதாகர், விஸ்மயா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - கோவிந்த் வசந்தா.  இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா பேசியதாவது:

உறியடி 2 படம் உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்காது, ஆனால் பாதிப்பை ஏற்படுத்தும். என் படங்கள் மூலம் கிடைத்த அடையாளங்கள் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள் அளித்ததுதான். அதனால் அவர்களுடைய வேலையில் நான் தலையிடுவதில்லை. அவர்களுக்கு என்னால் என்ன ஆதரவு அளிக்க முடியுமோ அதை அளிப்பேன். 

என்னைப் போல இயக்குநர் விஜய் குமாரும் வெளிப்படையாகப் பேசமாட்டார். மனத்தில் உள்ளத்தை வெளியே விவாதிக்கமாட்டார். அவருடனான ஓர் அறிமுகத்துக்குப் பிறகு நான் உறியடி படத்தைப் பார்த்தேன். இருவரும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். ஒருவர் சினிமாவுக்கு இந்தளவுக்கு உண்மையாக இருக்கமுடியுமா, இவ்வளவு தீவிரமாகப் பண்ணமுடியுமா என்று அவரிடம் பேசியபோது தோன்றியது. சினிமாவுக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, குழந்தையை விட்டுப் பிரிந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 

என் அப்பா என் படங்களின் படப்பிடிப்புகளுக்கு வந்தது கிடையாது, ஓர் இயக்குநர், தயாரிப்பாளரைச் சந்தித்தது கிடையாது, யாரிடம் சென்று வாய்ப்பு கேட்டது கிடையாது, கதை கேட்டது கிடையாது... இருந்தாலும் ஒரு நடிகனின் மகன் என்கிற அடையாளம் எனக்கு உண்டு. ஆனால் எந்த அடையாளமும் இல்லாமல் ஒருவர் உறியடி என்றொரு படம் எடுத்துள்ளார். இது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. படத்தை உண்மையாக எடுத்துள்ளார். உறியடி படத்தை எல்லோரும் சொந்த விருப்பத்தின் பேரில் விளம்பரம் செய்து படத்தின் வெற்றிக்கு உதவினார்கள். உறியடி 2 படத்துக்கு நியாயமான தீர்ப்பை ரசிகர்கள் வழங்கவேண்டும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT