18 நவம்பர் 2018

‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்!

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 30th August 2018 01:57 PM

 

தினமணி இணையதளம் ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் சிலருடன் இணைந்து நடத்தும் சென்னையின் சமையல் ராணி போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல். முன்னதாகச் சொல்லப்பட்ட வரையறைகள் தான் என்ற போதும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக் கொள்வது நல்லதல்லவா?!

  • மெனு: சைவம்
  • ஐட்டம்ஸ்: ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட்.

சமையல் போட்டி நடைபெறும் நாள் : செப்டம்பர் 1, சனிக்கிழமை.


நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை


 இடம்: எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.

சமையல் போட்டிக்கான கால அளவு: 1 மணி நேரம்.

சென்னையின் சமையல்ராணி போட்டியின் நடுவர்கள்

‘நளமகாராணி’ என்று தமிழ்நாடு கொண்டாடும் மல்லிகா பத்ரிநாத், சென்னையின் பிரபல உணவியல் வல்லுனர்களில் ஒருவரான மீனாக்‌ஷி பெட்டுகோலா, ‘அறுசுவை அரசி’ ரேவதி மூவரும் தான் சென்னையின் சமையல் ராணி போட்டிக்கான நடுவர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். 

‘நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.’

நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். தினமணி இணையதளம் நடத்தும் இந்த பிரம்மாண்ட சமையல் போட்டிக்கான பரிசுகளும் பிரமாதமானவையாகவே இருக்கும்.

  • மெகா சமையல் போட்டிக்கென இதுவரை வந்து குவிந்திருக்கும் விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 60 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். அவர்களது பட்டியல் நாளை காலை தினமணி இணையதளத்தில் வெளியிடப்படும். குலுக்கல் முறையில் தங்களுக்கான ஐட்டங்களைத் தேர்வு செய்யவிருக்கும் போட்டியாளர்கள் அவரவர் தேர்வுக்கேற்ப 20 பேர் கொண்ட மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு சமையல் போட்டியில் பங்கேற்பார்கள்.
  • ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். மொத்தம் ஆறு பரிசுகளுடன், தினமணி இணையதளத்தின் ரொக்கப் பரிசு, மற்றும் போட்டியில் வென்று வாகை சூடி ‘சென்னையின் சமையல் ராணி’ விருது பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

பங்கேற்பீர்... பரிசுகளை வென்றிடுவீர்!

போட்டி குறித்த முந்தைய விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

Tags : 'Chennai's cooking queen' Mega cooking contest சென்னையின் சமையல் ராணி மெகா சமையல் போட்டி தினமணி இணையதளம் நடத்தும் மெகா சமையல் போட்டி Dinamani.com' mega cooking contest chennai's cooking q

More from the section

தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!
திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!
உலக சுற்றுலா தினப்போட்டியில் 5 ஆம் பரிசு பெற்ற வாசகி மீனாள் தேவராஜனின் சுற்றுலா அனுபவங்கள்!
உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!
உலக சுற்றுலா தினப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பறவைச் சுற்றுலா அனுபவக் கட்டுரை!