ஸ்மார்ட்ஃபோனைக் கட்டிக் கொண்டு வாழ்வது பழக்கமல்ல; ஒரு வகை நோய்

வாஷிங்டன்: ஸ்மார்ட்போனை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அலைவது ஏதோ ஒரு பழக்கம் என்று நினைத்தால்  அது தவறு. மற்ற போதைப் பழக்கம் போல அதுவும் ஒரு நோய்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஸ்மார்ட்ஃபோனைக் கட்டிக் கொண்டு வாழ்வது பழக்கமல்ல; ஒரு வகை நோய்


வாஷிங்டன்: ஸ்மார்ட்போனை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அலைவது ஏதோ ஒரு பழக்கம் என்று நினைத்தால்  அது தவறு. மற்ற போதைப் பழக்கம் போல அதுவும் ஒரு நோய்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நமது ஒரு உடல் உறுப்பு போல எப்போதும் நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனில் வரும் சமிக்ஞைகள் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அதே சமயம், செல்போனில் ஒரு குறுந்தகவலோ, புகைப்படமோ, செய்தியோ வந்திருக்கிறது என்று ஒரு பீப் ஒலித்த அடுத்த நிமிடம் அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? அப்படியானால் அது போதைப் பழக்கத்துக்கு ஈடானது என்கிறார்கள்.

மற்ற போதைப் பழக்கங்களைப் போலவேதான் ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவதும்.

ஒரு போதை வஸ்துவைப் பயன்படுத்தும் போது, அது நரம்புகள் வழியாக மூளைக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறதோ அதேப்போன்ற ஒரு விளைவைத்தான் ஸ்மார்ட்போன் விஷயத்திலும் மூளை சந்திக்கிறது என்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள்.

இளைஞர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது, வகுப்புகளில் இருப்பது, டிவி பார்ப்பது, சாப்பிடுவது என இன்ன பிற வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் மூளை அதிகச் சோர்வடைவதாகவும், ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் மூளைக்குத் தேவையான ஓய்வு குறைவாகவே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் போதைக்கு நாம் காரணம் அல்ல. தொழில்நுட்ப உக்திகளைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நிறுவனங்களின் வலையில் தெரியாமல் விழுந்து மாட்டிக் கொள்கிறோம். 

ஸ்மார்ட்போன்களில் சமிக்ஞை வரும் போது நமக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றம், ஒரு புலி அல்லது மோசமான விபத்து நேரிடும் போது ஏற்படும் மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. எனவே நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com