பயணிகளை சதா பாணியில் போ.. அட போய்யான்னு சொல்லக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு

பேருந்து கட்டண உயர்வால் குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த விழுப்புரம்  மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
பயணிகளை சதா பாணியில் போ.. அட போய்யான்னு சொல்லக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு

பேருந்து கட்டண உயர்வால் குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த விழுப்புரம்  மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பேருந்தில் பயணிக்கும் பயணிகளை மரியாதைக் குறைவாக, வா, போ என ஒருமையில் பேசக் கூடாது என்றும், மரியாதையாக நடத்தும்படியும் பேருந்து நடத்துர்களுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

மண்டல மேலாளர்கள் மற்றும் இரண்டு அதிகாரிகளின் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியின் போது, பேருந்தில் பயணிக்கும் பயணிகளை மரியாதைக் குறைவாக நடத்துவதோ, ஒருமையில் வா, போ என அழைப்பதையோ நடத்துநர்கள் நிச்சயம் தவிர்த்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. 

பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், சில்லறை மற்றும் பயணிகளின் உடமைகள் போன்ற விஷயத்தில் பல சமயங்களில் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடப்பது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், பள்ளிச் சிறார்களிடமும், மாற்றுத் திறனாளிகளிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், அவர்களுக்கான சலுகைகளை மறுக்காமல் வழங்குமாறும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2018ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு வரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2.02 கோடி பேர் வரை பயணம் செய்த நிலையில், டிக்கெட் கட்டண உயர்வால் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அரசுப் பேருந்தை தவிர்த்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com