மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன?

தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தே செய்யப்பட்ட செயல் மற்றொரு தீங்கு உடனே நேர்ந்துவிடும் என்று நியாயப்படுத்தத்தக்க சூழ்நிலையில் நடைபெற்றிருக்க வேண்டும்.
மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன?

மருத்துவ சிகிச்சை, சிகிச்சையளிப்பதை நிறுத்த சம்மதம்,மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை  பற்றி சட்டம் சொல்வதென்ன?

இந்திய தண்டனைச் சட்டத்தில் சிகிச்சையும் இசைவும்...
    

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 81 ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் செயல் ஒன்றை அச்செயல் அவருக்கு  காயம் விளைவிக்கும் என்று தெரிந்தே செய்தாலும் அவருக்கு தீங்கு செய்யும் உள்நோக்கம் இல்லாமலும் மற்றொரு தீங்கியிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் நன்னம்பிக்கையிலும் செய்யப்பட்டிருந்தால் தீங்காகாது.

விளக்கம் :

தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தே செய்யப்பட்ட செயல் மற்றொரு தீங்கு உடனே நேர்ந்துவிடும் என்று நியாயப்படுத்தத்தக்க சூழ்நிலையில் நடைபெற்றிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுகள் : ஒரு கப்பலின் கேப்டன் தன் கப்பல் பயணிக்கும் பாதையை மாற்றினால் 20 அல்லது 30 பேர் பயணிக்கும் படகின்மீது மோதுவதை தவிர்க்கலாம். அப்படி பாதையை மாற்றும்போது 2 பேர் பயணிக்கும் படகின் மீது மோத வேண்டியிருக்கும் எனும் தருவாயில் அவ்வாறு 2 பேர் பயணிக்கும் படகின் மீது மோதுவதில் தவறில்லை.
    

தீ பரவிக் கொண்டிருக்கும் போது யு என்பவர் அது பரவுவதை தடுப்பதற்காக ஒருவரின் வீட்டை நன்னம்பிக்கையில் கீழே தள்ளிவிடுகிறார். யு எந்தக் குந்தகமும் செய்யவில்லை.
    

பிரிவு 87 ஒருவருக்கு இறப்பையோ கொடுங்காயத்தையோ விளைவிக்கும் உள் நோக்கமற்ற 18 வயதிற்கதிகமான ஒருவர் வெளிப்படையாக அல்லது குறித்துணருமாறு கொடுக்கப்பட்ட இசைவினைப் பெற்று செய்பவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயலெதுவும் குற்றமாகாது.

பிரிவு 88 ஒருவரின் இறப்பை செய்யும் உள் நோக்கமில்லாத அவரின் நன்மைக்காக நன்னம்பிக்கையில் செய்யப்படும் செயலெதுவும் வெளிப்படையான அல்லது குறித்துணருமாறு கொடுக்கப்பட்ட இசைவைப் பெற்ற செயலெதுவும் இடர் நேரும் வாய்ப்பை எதிர்கொள்பவர் அல்லது அதனால் வருந்தத் தயாராக உள்ளவர்களால் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது.
    

பிரிவு 89 : 18 வயதிற்குறைந்த அல்லது மனநலம் இல்லாத நபர் ஒருவரின் நலனுக்கான நன்னம்பிக்கையில் செய்யப்படும் செயல் அவரது காப்பாளர் அல்லது சட்டப்படியான பொறுப்பாளரின் நேரடியான அல்லது குறித்துணரும்படியான இசைவைப் பெற்று செய்யப்படும் செயலெதுவும் குற்றமாகாது.
    

1-வது விலக்கு - அவரது மரணத்தை நிகழ்த்தவோ அல்லது நிகழ்த்தும் முயற்சியிலோ அச்செயல் செய்யப்படக்கூடாது.
    

2-வது விலக்கு - மரணத்தையோ கொடுங்காயத்தையோ தான் செய்யப்போகும் செயல் விளைவிக்கும் என்பதை செய்பவர் தெரிந்தே செய்யும் செயல்களுக்கு பொருந்தாது. ஆனால், இறப்பு, கொடுங்காயம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற செய்யப்படும் செயல்களுக்கு பொருந்தும்.
    

3-வது விலக்கு கொடும் காயம் விளைவித்தல், அந்த முயற்சியில் கொடுங்காயம் விளைவிக்கும் செயல்களுக்கல்லாமலும் கொடுங்காயத்தை கொடும் நோயை உடல் நலக்கேட்டை தவிர்க்கும், குணப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டாலும் அது குற்றமாகாது.
    

4-வது விலக்கு கொடுங்காயம், மரணம் விளைவிக்கும் செயல்களை தூண்டிவிடும் செயலுக்கும் இது பொருந்தது.
    

பிரிவு 90 தனக்கு கேடு விளைந்துவிடும் என்ற பயத்தில் கொடுக்கப்படும் இசைவும் சங்கதிகளை தவறாக உணருவதன் மூலம் தரப்படும் இசைவும் அல்லது இசைவுடன் செய்ய வேண்டிய செயலை செய்யும் நபர் அத்தகைய இசைவு பயத்தினாலோ சங்கதியை தவறாக உணர்ந்து கொள்வதினாலோ தரப்பட்டுள்ளது என்பது தெரிந்தோ நம்புவதற்கு காரணம் இருந்தோ பெறப்படும் எந்தவொரு இசைவும் இசைவாக ஆகாது.
    

ஒருவர் மன நோய் காரணமாகவோ போதையேற்றப்பட்ட தாலோ எதற்காக அந்த இசைவு தரப்பட்டது அதன் தன்மையும் விளைவும் என்ன என்பதறியாது கொடுக்கப்பட்ட இசைவும்.
  

சூழ்நிலை சந்தர்ப்பங்களில் அப்படித் தோன்றாமல் 12 வயதிற்கு குறைந்த ஒரு நபர் வழங்கும் இசைவும் இசைவாகாது.
    

பிரிவு 92 : ஒருவரின் இசைவில்லாமல் அல்லது அவரது இசைவை தரும் சூழ்நிலைகயில் அவரில்லாத போது சூழ்நிலை சந்தர்ப்பங்கள் இது குறித்து இசைவை அவர் தர இயலாத நிலையிலும் வேறு தகுதியின்மையால் இசைவளிக்கவில்லை எனினும் அவரது சார்பாக அவரது சட்டப்படியான பொறுப்பாளர் அல்லது காப்பாளர்களிடம் இசைவை அந்த நேரத்தில் அச்செயலை புரிவதற்காக இசைவை பெற முடியாவிட்டாலும் அவரது நன்மைக்காக செய்யப்படும் செயல்களால் ஏற்படும் ஊறு குற்றமாகாது. ஆனால் அத்தகைய செயல்

விலக்கு 1 : அவரை கொலை செய்யவோ அல்லது கொலை செய்ய முயற்சிக்கவோ.

விலக்கு 2 : அச்செயலை செய்யும் நபருக்கு தெரிந்து இறப்பு கொடுங்காயம் கொடும் நோய் உடல்நலக் குறைபாடு போன்றவைகளிலிருந்து காப்பாற்றுவதற்கன்றி அவரின் இறப்பை ஏற்படுத்திவிடும் செயல்களை செய்யக்கூடாது.

விலக்கு 3 : தன்னிச்சையாக காயம் விளைவித்தல் அதற்காக முயற்சித்தல் போன்ற செயல்களை ஒருவரின் மரணத்திலிருந்து காயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தவிர செய்யக்கூடாது.
விளக்கம் : மேற்கண்ட குற்ற செயல்களை தூண்டி விடும் நோக்கத்துடனும் செய்யக் கூடாது.
எடுத்துக்காட்டுகள் :
    

குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒருவர் மயங்கி கிடக்கிறார். அதைக்கண்ட மருத்துவர் அவரது தலை எலும்பின் ஒரு பகுதியை அகற்றுவது அவசியமென அறிந்து அவரது தலை எலும்வை இசைவை பெறாமல் அகற்றுகிறார். அடிப்பட்டவரின் நலனுக்காக அவரது மரணத்தை விளைவிக்கும் எண்ணமில்லாமல் அடிப்பட்டவர் சுய நினைவுக்கு திரும்பும் முன் எலும்பை அகற்றுகிறார். மருத்துவர் ஒரு தவறும் செய்யவில்லை.
    

புலி ஒரு நபரை தூக்கி செல்வதை கண்ட நபர் புலியை சுடுகிறார். அது அவ்வாறு தூக்கி செல்லப்படும் நபரின் இறப்பை ஏற்படுத்துகிறது. அவரது மரணத்தை கருதாமல் செய்யப்பட்ட இச்செயலிலும் துப்பாக்கியால் சுட்ட நபர் ஒரு தவறும் செய்யவில்லை.
    

விபத்தில் அடிப்பட்ட 12 வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையை கண்ட மருத்துவர் அதைக் காப்பாற்ற அதன் சட்டப்படியான காப்பாளரிடமிருந்து அனுமதி பெறாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். அப்போதும் அம்மருத்துவர் எத்தவறும் புரியவில்லை.
    

தீப்பற்றி எரியும் வீட்டிலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்ற கீழே விரித்து வைக்கப்பட்டுள்ள விரிப்பான் மீது அக்குழந்தையை தூக்கி போடுகிறார்கள். தவறுதலாக இக்குழந்தை கீழே விழுந்து இறந்து விடுகிறது. அக்குழந்தையை தூக்கி எறிந்தவர் அப்போதும் எத்தவறும் புரியவில்லை.


விளக்கம் : பிரிவு 88, 89, 92-ல் கண்டவைகளுக்கு பணத்தை பொறுத்த லாபம் ஒரு லாபமாக கொள்ளப்படமாட்டாது.

மருத்துவ சிகிச்சையில் இசைவின் அவசியம் என்ன? எவ்வகையான இசைவுகள் இசைவுகளாகவும் குழந்தைகள் மன் நோய்க்குள்ளானார் அவசர சிகிச்சையின் போது என்ன செய்யலாம்? இசைவு பெற்றதாக சொல்லப்படுபவை மெய்ப்பிப்பது யாருடைய பொறுப்பு என்பது குறித்து இங்கே அறியலாம்.

தீங்கியியல் சட்டத்தில் தாக்க முனைதல் மற்றும் தாக்குதல் பொய்சிறையிடல் என்பவை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

தாக்குதல் என்பது சட்டப்படியாக நியாயப்படுத்தாமல் ஒருவர் மீது வன்முறையை உபயோகப்படுத்துதல் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
    

தாக்க முனைதல் என்பது ஒரு நபர் தன்மீது பிறர் வலிமையை உபயோகப்படுத்தி விடுவார் என்பதற்கு தகுந்த காரணங்களால் அஞ்சுதல் எனவும் விளக்கப்பட்டுள்ளது. பொய்முறை என்பது சட்டத்தின் அதிகார அனுமதி இன்றி ஒருவரை பிடித்து வைத்தல் என கூறப்பட்டுள்ளது. நீதியரசர் கார்பிசோ கூற்றுப்படி தக்க வயதுடைய போதுமான அறிவு பெற்ற ஒவ்வொரு மனிதருக்கும் தான் உடம்பின் மீது என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை உள்ளது. எனவே நோயாளியின் சம்மதமின்றி செய்யப்படும் ஆபரேசனுக்கு மருத்துவர் பொறுப்பாகி அதனால் விளையும் ஊறுக்கு பொறுப்பாக வேண்டும்.

சம்மதத்தின் அவசியம் (consent to medical treatment consent)
    

ஒவ்வொரு மருத்துவரும் தன் கடமையின் ஒரு பகுதியாக அவர் என்ன செய்ய நினைக்கிறார் அதன் தாக்கம் என்ன? அத்தகைய சூழ்நிலையில் பொறுப்புள்ள மருத்துவர் என்ன செய்வார்? ஏதாவது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இருந்தால் அதை தவிர்ப்பதற்கு அனைத்து முன்னேற்பாடுகள் எடுத்திருந்தாலும் அந்த துரதிஷ்டமான சூழ்நிலையை பற்றியும் நோயாளிக்கு எச்சரித்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஒரு மருத்துவரை அணுகும் நோயாளி மறைமுகமாக அம்மருத்துவர் எடுக்கப்போகும் மருத்துவமுறைகளுக்கு இசைவளிப்பதாக இருந்தால் சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

1. Schweizer V Central hospital (1974) 53 DLR (301) 494

ஸ்வைட்சர் எதிர் மத்திய மருத்துவமனை (1974) 53 னுடுசு (301) 494 என்ற வழக்கில் தீர்மானிக்கப்பட்டது யாதெனில் தகவலளிக்கப்பட்ட இசைவு என்பது புறமெய்ம்மைகளை கருத்தில் கொண்டு செய்யவிருக்கிற சிகிச்சையின் நன்மைகளையும், தீமைகளையும் அதிலும் குறிப்பாக சிகிச்சையிலுள்ள அபாயங்களையும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தலாகும்.
    

ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறை பயிற்சி என்பது நோயாளியின் தேவைக்கேற்ப நோயாளிகளை பொறுத்து மாறும். ஒரு சிகிச்சை மேற்கொள்ளும் போது அதனால் விளைய வாய்ப்புள்ள பக்க விளைவுகளைப் பற்றி எச்சரிக்க வேண்டும்.
    

கனடாவில் நடைபெற்ற Reibl V hughes (1980) 114(3d) 1 Sec Canada (1980)2 SCR 880 என்ற வழக்கில் இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காகவும் பின்னாளில் அவருக்கு மாரடைப்பு ஏற்படாது இருக்கவும் ஆபரேசன் செய்யப்பட்டது. அதிலுள்ள அபாயத்தை குறித்து நோயாளிக்கு தகவல் தரப்படவில்லை. ஆபரேசனின் போது முடக்குவாதமும் மாரடைப்பும் ஏற்பட்டது. சம்மதம் பெறாமல் நடைபெற்ற அச்சிகிச்சை அந்நோயாளியின் மேல் செய்யப்பட்ட தாக்குதல் எனவும் கவனக்குறைவுக்கு அவர் பொறுப்பு எனவும் முடிவு செய்யப்பட்டது.

1. Planned parenthood of South Eastern penny Sylvania V Robert, P.Casey 505 Us 674

அமெரிக்காவில் தகவலளிக்கப்பட்ட இசைவு ஒரு பெண்ணின் கருக்கலைப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் போதுமானது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பெனிசில் வேனியா கருக்கலைப்பு சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி சரியானது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
    

கருக்கலைப்பு செய்வதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு கருக்கலைப்பு செய்யும்முறை சுகாதாரம் தொடர்பான அபாயங்கள், கருவளர்ச்சிக்காலம் குழந்தை பிறப்பு அதற்குள்ள உதவிகள் தொடர்பாக அச்சிட்ட விளக்கங்கள் தத்து எடுத்துக் கொள்ளும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை கருச்சிதைவு செய்யப்போகும் பெண்மணிக்கு தெரிவித்த பின்பு அப்பெண் மேற்கண்ட சங்கதிகளை தனக்கு விளக்கி கூறப்பட்டதாக சான்றிதழ் தர வேண்டும்.
    

சிகிச்சைக்காக கொடுக்கப்படக்கூடிய சம்மதம் உண்மையான ஒன்றாக இருக்க வேண்டும். மோசடியாகவோ தவறான எடுத்துரைப்பினாலோ பெறக்கூடிய சம்மதம் உண்மையான சம்மதம் ஆகாது. தகாத செல்வாக்கு (Undue Influence), வன்முறை, பயமுறுத்துதலோ பெறப்பட்ட இசைவும் இசைவாகாது.

Chattern V Gerson (1980) BMLR80 (1987) 3 WLR 1003 என்ற வழக்கில் நீதியரசர் பிரின்டோ தீர்ப்பளித்தது என்னவென்றால் கவனக்குறைவின் அடிப்படையில் இழப்பீடு கோரும் போது தகவலளிக்க வேண்டிய கடமையை தவறியதாக மட்டுமல்லாது அந்நோயாளி ஆபரேசன் செய்ய சம்மதிக்காவிட்டால் என்ன கடமை இருக்கிறதோ என்பதையும், அதையும் செய்ய தவறியதாக நிரூபிக்க வேண்டும்.
[டாமனரினோ மார்சல் டி குரூஸ் எதிர் சென்ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் 1999  CCJ 1043 தநா]

இவ்வழக்கில் தீங்குற்ற கண்ணை நோயாளியின் நலன் கருதி மற்ற கண்ணுக்கும் மூளைக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் சம்மதமின்றி மருத்துவர் அகற்றினார். அச்செயலுக்கு அவரை பொறுப்பாக்க முடியாது என தமிழக மாநில நுகர்வோர் ஆணையம் தீர்ப்புரைத்தது.
     

Mr.Manjukaben Vinodbhai patel V Dr.Hashidak Patel 1997 (3)CPR 264 மஞ்சுலேபன் வழக்கில் நோயாளி 13 வார கர்ப்பத்தை கலைக்க முற்படும் போது ஏற்பட்ட அதிகப்படியான அரசத்தப்போக்கினால் அவரது கர்ப்பப்பையை அகற்ற நேரிட்டது.  அந்த கட்டத்தில் என்ன செய்வது என்பது பற்றி  2 மருத்துவர்களிடம் கருத்துரை பெற்றதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.  சம்மதப் பத்திரம் காணாமல் போயிருந்தாலும் போலிஸ் விசாரரணயில் நோளரி சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.  எனவே மருத்துவர் கவனக்குறைவுடன் செயல்படவில்லை என தீர்மானிக்கப்பட்டது.
சிகிச்சையளிப்பதை நிறுத்துவதற்கு சம்மதம்:
    

இந்தியாவில் அருணா இராமச்சந்திரா வழக்கு போன்றே பொருண்மைகளை கொண்டவும் வழக்கு நான்சி  வழக்காகும்.

2. Nancy Berth Cruzan V Hotel Dieu de Quebee etal (1992) 86 DLR
    

தீர்க்க முடியாத முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுவாசிக்க உதவும் கருவியுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்தார். அவர் சைகையின் மூலமாக தனக்கு மேற்கொண்டு சிகிச்சையளிப்பதை நிறுத்திவிட வலியுறுத்தினார்.  கியூபக் உச்ச நீதிமன்றம் நோயாளி வரும்பும் அந்நேரத்தில் அக்கருவிகளை அகற்ற உத்தரவிட்டது.
    

பொறுப்புள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்களின் கருத்துப் படி நோயாளி உயிர் வாழ்வதை தொடர விரும்பாத சூழ்நிலையிலும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் அவ்வாறு உயிர் வாழ உதவும் மருத்துவ சிகிச்சையை நிறுத்தலாம்.
    

36 வார வயதுடைய கர்ப்பத்தை சுமந்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர் மருத்துவர்களின் அறிவுரைக் கெதிராக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தார்.  நீதிமன்றம் அவருக்கு சிசேரியன் ஆபரேசன் செய்ய உத்தரவிட்டது.  அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த போதும் நீதிமன்றம் தெளிவான சிந்தனை படைத்த மனிதர் ஒவ்வொருவருக்கும் தனக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையில் தான் வாழ்வு அடங்கியிலுந்த போதிலும் அச்சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

St.George Health Care N.H.Strust Vs S(1993)3 WLR 936(A)

இளவல் மைனர் குழந்தைகளுக்கும் மன நோயுள்ளவர்களுக்கும் சிகிச்சையளிக்கும் போது இசைவு : 
    

இந்தியன்  மெஜாரிட்டி சட்டம் 1875-ன் படி பிரிவு 3-ன் படி 18 வயது நிரம்பாத ஒருவர் இளவலாக கருதப்படுவார்.  அவரது நலனுக்கு செய்யும் சிகிச்சையினாலும் பிரிவு 89 இந்திய தண்டனை சட்டத்தின’; படி அவரது காப்பாளரின் இசைவின் பேரில் தான் செய்யப்பட வேண்டும் பிரிவு 2 (4) மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி ஒரு  மைனர் பெண்ணின் கர்ப்பம் அவரது காப்பாளரின் எழுதப்பட்ட சம்மதமின்றி கருக்கலைப்பு செய்யப்படகூடாது.
    

Gillick V West Norfolk and Wisbech area Health Authority (1986) AC 112 (1985) AB ERP 402 என்ற வழக்கில் இளவல் நபர் ஒருவர் போதுமான அறிவும் புரிந்து கொள்ளும் சக்தியும் இருந்தால் எடுத்துக் கொள்ளக் கூடிய சிகிச்சைக்கும் அதற்குரிய இடர்நேரும் வாய்ப்புள்ள கூழ்நிலைக்கும் தன் இசைவை அளிக்க இளலும் என தீர்ப்புரைக்கப்பட்டது.  ஆனாலும் ஒரு பெண்ணுக்கு செய்யப்படும் மலடாக்கும் சிகிச்சை போன்றவற்றிற்கு பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் இசைவு அவசியம்.  குழந்தை நலனுக்காக இரத்தும் ஏற்றுவதற்கு சம்மதிக்காத பெற்றோர்களை மீறி குழந்தையின் சார்பாக இசைவளிப்பதற்கு நீதிமன்றத்திற்கு உரிமையுண்டு.
 

மன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல் (treatment for mentally disabled)
    

பிரிவு 2 (1) நலச்சட்டத்தின்படி மனநலக் குறைவு ஏற்பட்ட நபர்  என்பது மூளைவளர்ச்சிக் குறைவு தவிர மற்ற விதத்தில் ஏற்படும் மன நோய் உள்ளதையும் அவருக்கு சிசிச்சையளிக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் குறிக்கும்.  மனநோய் குறையுள்ள ஓருவர் தன்னிச்சையாக மருத்துவமனையில் தன்னை அனுமதிக்குமாறு வேண்டிக் கொண்டாலும் அவர் இளவலாக இருந்தால் அவரது காப்பளாரின் ஒப்புதலின் பேரிலும் அவர் மருத்துவமனையை நிர்வகிக்கும் மனநல நோய் மருத்துவர் அனுமதிக்கலாம்.  90 நாட்கள் வரை வயதடைந்த ஒரு நோயாளியை மருத்துவமனையில் வைத்திருக்கும் படி அவரது உறவினர்கள்,  நண்பர்கள் வேண்டுகோளிட்டால் இரு மருத்துவர்களின் கருத்துரைப்படி அந்நோயாளியை மருத்துவமனையில் வைத்திருக்கலாம். இளவலான ஒரு மன நோயாளி வயதடைந்த பின்னும் 90 நாட்களுக்கு மருத்துவர் குழு (இரு மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழு)  அவர்களுக்கு சிகிச்சையளிப்பது அவசியமென சான்றிதழளித்தால் வைத்திருக்கலாம்.
    

மனநலச் நட்டத்தின் பிரிவு 22-25-ன் படி ஒரு மன நல மருத்துவர் அவரது மனைவி அவரது உறவினர்கள் வயதடைந்த குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் வேண்டுகோளின் படி அல்லது காவல்துறையினர் அல்லது தனிநபரின் வேண்டுகோளின்படி அவரை ஒரு வரவேற்கும் உத்தரவின் மூலம் (Reception Order) நீதிமன்றம் மனநல மருத்துவமனையில் வைப்பதற்கு உத்தரவிடலாம்.
    

ஒரு மனநலமில்லா நோயாளி வாய்வழியாக உணவு உட்கொளவதை தவிர்த்தால் அவரைக் கட்டாயப்படுத்தி குழாயின் மூலமாக உணவு உட்கொள்ள வைப்பதும் ஒரு சிகிச்சை B.V.Croydon Health Authority (11995) AII ER 863(CA) என்ற  வழக்கில் இங்கிலாந்தில் தீர்ப்புரைக்கப்பட்டுள்ளது.
    

மன நோயாளி சுய நினைவின்றியும் ஏற்புக்குரிய சம்மதம் வழங்க இயலாத சூழ்நிலையில் அந்நோயாளியின் நலனுக்காக அவரது சம்மதமின்றி சிகிச்சையளிக்கலாம்.  (பிரிவு 92 இந்திய தண்டனை சட்டம்).

TVTவு (1988) IER  613  என்ற வழக்கில் மனநோயாளி  ஒருவன் கர்ப்பமாக்கப்பட்ட  சூழ்நிலையில் மருத்துவர்கள் கருச்சிதைவு செய்வதற்கும் மலடாக்குவதற்கும் எடுத்த முடிவுக்கு நீதிமன்றம் இதற்கென சட்டம் வகைமுறை செய்யாத நிலையிலும் நோயாளி சம்மதமளிக்க முடியாத அளவுக்கு மன நோயால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நல்ல மருத்துவத்  தொழிலின் தன்மை வற்புறுத்து வதால் அந்நோயாளிக்கு அச்சிகிச்கையளித்து நீதியின் பால் உகந்ததே என தீர்ப்புரைக்கப்பட்டது.  அதே போன்று மன நோயாளி பெண்ணின் மடாதவிடாய் ஒழுக்கை கருத்திற்கொண்டு  கருத்தடை சாதனத்தை அவரது கர்ப்ப்பபையில் வைப்பது நோயாளியின் நலனுக்குகந்தது என மேல்முறையிட்டு நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

அவசர கால சிகிச்சை : 
    

நோயாளியின் நலனுக்காக அவர்கள் சம்மதமளிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் போது அவரது உயிரை காக்கவும் மன நலன் காக்கவும் நிரந்தர ஊனத்திலிருந்து காக்கவும் தேவையில்லாத வலியில் துயருருவதை தவிர்க்கவும் அந்நோயாளிக்கு சிகிச்சையளிக்கலாம் என இதே பிரிவு 92-ம் பன்னாட்டு நீதிமன்ற தீர்ப்புகளும் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com