மனித உடலை வியாபாரப் பொருளாக்குவது நியாயமா?

கடந்த பல ஆண்டுகளாக உறுப்புகளுக்காகவும் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றிற்காகவும் செய்யப்படும் மனித வணிகம்
மனித உடலை வியாபாரப் பொருளாக்குவது நியாயமா?

மனித வணிகத்தின் வடிவங்கள்

கடந்த பல ஆண்டுகளாக உறுப்புகளுக்காகவும் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றிற்காகவும் செய்யப்படும் மனித வணிகம் என்பது சர்வதேச கவனத்தை பெற்றுள்ள நிலையில், மனித உடலை வியாபாரப் பொருளாக்குவது இப்போது மிக தீவிர கவனிப்பைப் பெற்றிருக்கிறது. துரதிருஷ்டவசமாக மனித வணிகத்தின் மற்றொரு வடிவமானது சர்வதேச சமூகத்தின் அதே அளவு கவனத்தையும், கடும் சீற்றத்தையும் பெறத் தவறியிருக்கிறது: பதிலி தாய்மை / வாடகைத் தாய் என்பதே. பதிலி தாய்மை என்பது, ஒரு மானுட நபரை ஒரு வியாபாரப் பொருளாக்குவது: இதில் குழந்தை என்பது ஒரு வழக்காறு மரபின் வெறும் வியாபாரப் பொருளாகிறது. வாடகைத்தாய், ஒரு இன்குபேட்டராக, அதாவது அடைகாப்புக் கருவியாக பயன்படுத்தப்படுகிறார்; இத்தகைய வியாபாரப் பொருளாக்குவது, வாடகைத்தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரின் கண்ணியத்தையும் மீறுகிறது. ஒரு பதிலி தாய் (வாடகைத்தாய்) ஒப்பந்தத்திற்குப் பிறகு பிறக்கக் கூடிய ஒரு குழந்தை மீது பெற்றோர்; என்ற உரிமை கொண்டாடுபவர்கள் ஆறு வயதுவந்த நபர்கள் வரை இருக்கக் கூடும். மரபணு தாய் (கருமுட்டை தானம் கொடுப்பவர்), கருவை சுமப்பவர் (வாடகைத்தாய்), இதை ஏற்பாடு செய்கிற மற்றும் பிறகு குழந்தையை வளர்க்கக் கூடிய தாய், மரபணு தந்தை (விந்து தானம் கொடுப்பவர்), வாடகைத் தாயின் கணவர்; (தந்தைமை அனுமானம்) மற்றும் இதை ஏற்பாடு செய்கிற மற்றும் பிறகு குழந்தையை வளர்க்கக் கூடிய தந்தை ஆகியோர் அடங்குவர். இதை ஏற்பாடு செய்கிற ஒரு அல்லது இரண்டு பெற்றோரின் பாலின் உயிரணுக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கருவை சுமக்கும் தாய் மரபணுத் தாயாகவும் இருக்கலாம். செயற்கையாக கருவுற்றவராக்கும்போது இது இருக்கக் கூடும். இந்த கையாளுகைகள் மரபணு உள்ளமைக்கு மாறானவை. இவை மிகவும் மிகவும் முரண்பாடாக, குறிப்பாக தந்தை யார் என்று தீர்மானிக்கும் விஷயத்தில் நாடப்படுகிறது. இவை, குழந்தையின் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் 7-ஆம் ஷரத்தில் உத்தரவாதமளிக்கப்பட்டவாறு குழந்தைக்கு தனது பூர்வீகம் மற்றும் அடையாளத்தை தெரிந்து கொள்வதற்கு உள்ள உரிமையையும் இவைகள் மீறுகின்றன. மேலும், இதுபோன்று இணைந்த உரிமைக்கோரிக்கைகள் தவிர்க்க முடியாத வகையில் வழக்குகளுக்கு வழி வகுக்கக் கூடும்.

பதிலி தாய்மை என்பது, மற்றவைகள் மத்தியில் இனப் பெருக்கத்திற்கு மருத்துவரீதியில் உதவும் ஒரு முறையாக, மலட்டுத்தன்மைக்கு ஒரு சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இது, இயற்கையாக குழந்தைகள் பெறமுடியாத தம்பதியருக்கு உதவுவதற்கு, பெற்றோர் என்ற முறையில் குழந்தையை பேணி வளர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுக்கும் ஒரு தாராளமான பொதுநல நடவடிக்கையாக எப்போதும் செய்யப்படுகிறது என்று பொதுவாக சித்தரிக்கப்படுகிறது. எனினும், இதில் எதார்த்தமான உண்மை என்பது, சர்க்கரை பு+சப்பட்ட இந்த சித்தரிப்பிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது.

இந்தியாவில் வாடகைத்தாய்மை முறையின் தாக்கமும் விளைவும்

பதிலி தாய்மை செயல்முறையின் ஆதரவாளர்கள் இதை, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கிற, வெற்றி தருகிற சூழ்நிலையாக கருதுகிறார;கள். ஒரு குழந்தை வேண்டும் என்று மிக ஆவலாக எதிர்பார்க்கும் ஒருவருக்கு  ஒரு குழந்தை பெறக்கூடியவரால், பணத்திற்காகவோ அல்லது கருணை அல்லது உபகாரத்திற்காகவோ, ஒரு பெற்றோராக ஆவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதில் உண்மை என்னவென்றால், பெரும்பாலான வாடகைத்தாய்மை நேர்வுகளில் பணம் கைமாறுகிறது. பணம் கைமாறும்போது, விஷயங்கள் மிகவும் மோசமாக மாறும் வாய்ப்புள்ளதால், மனிதர்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகின்றன.

இந்தியாவில், வாடகைத் தாய்மை தொழில்துறை மீது கிட்டத்தட்ட எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், இது ஒரு தொழில்துறை தான். 'அப்பாவி இந்தியப் பெண்கள் இதில் ஏமாற்றப்படுகின்றனர்’ என்று ஆய்வு கூறுகிறது.

ஒழுங்கு முறைப்படுத்தப்படாத மற்றும் அபாயகரமான தொழிலின் வெளியில் தெரியாத ஒரு அடிப்பக்கம் இதில் இருக்கிறது. இதற்கு பெண்கள் வழக்கமாக குடிசைப்பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்படுகின்றனர். ஒரு அமைவிடத்தில் ஓராண்டு இதற்காக தங்கியிருப்பதற்கு முன்பு, அவர்களால் வாசிக்க முடியாத ஒப்பந்தங்களில் கையொப்பமிடுமாறு செய்யப்படுகின்றனர்.

மருத்துவர்கள் ஒரு நாளுக்கான பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக சீசரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறக்கச் செய்கின்றனர். அப்படி குழந்தை பிறந்தவுடன், வாடகைத்தாய், அவருக்கு உறுதியளிக்கப்பட்ட முழு இழப்பீட்டுத் தொகையையும் கொடுக்கப்படாமலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.

இந்தியாவில் வாடகைத்தாய்மை முறை என்பது 'ஏதோ போகிற போக்கில் போகிறது’ என்று கியன்னா தொபோனி என்ற செய்தியாளர் வர்ணிக்கிறார்.

இதை ஒரு பாதுகாப்பான தொழிலாக மாற்றக்கூடிய ஒழுங்குமுறை விதிகளை இந்திய அரசாங்கம் பிறப்பிக்கவில்லை. அதிக ஒழுங்குமுறை விதிகளும் மற்றும் தம்பதியர்களின் அதிக முயற்சிகளும் இருந்தால் அது உதவக் கூடும். வாடகைத் தாய் எந்தவகையான அழுத்தத்தில் உள்ளார் என்பதை உண்மையில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது தம்பதியரின் பொறுப்பாகும். குழந்தை பிரசவத்தின் போது இறந்துவிடுவோம் என்று எப்போதாவது பயந்தது உண்டா என்று மகப்பேறுக்காக மேஜையில் கிடத்தப்பட்டிருந்த ஒரு வாடகைத்தாயை நான் கேட்டேன். அதற்கு 'ஆமாம், அது ஒரு உண்மையான சாத்தியம் என்று எனக்கு தெரியும்’, என்று அவர் பதிலளித்தார். அவர்களுக்கு மருத்துவரீதியில் நிலைமை என்ன என்பது வாடகைத்தாய்களுக்கு புரியும், ஆனால் அதே சமயம் பெண்கள் தங்கள் உயிர்களை இதற்காக பணயம் வைக்கிறார்கள்.

இப்போது வாடகைத் தாய் தொழிலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம், அதுதான் உண்மையில் அச்சுறுத்துவதாக இருக்கிறது. 2010-ஆம் ஆண்டில் இதற்காக ஒரு சட்ட மசோதா பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது சட்டமாக இயற்றப்படவில்லை. நாங்கள் பார்க்க முடிந்த மருத்துவமனைகளில் இந்த பெண்கள் யாருக்கும் மோசமான மருத்துவ சேவை தரப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை. அதே சமயம், எத்தனை கருக்கள் உள் வைக்கப்படலாம் என்பதற்கு உச்ச வரம்பே இல்லை. நேரம் அல்லது பணம் வீணாகாமல் அந்தப் பெண் கர்ப்பமாகும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதற்கு டாக்டர்கள் ஒன்று அல்லது இரண்டு கருக்களை உட்புகுத்துவதுண்டு.

அடுத்து பத்திரிகையாளர் தொபோனி கண்டறிந்ததை, ஒரு மனித வணிக செயல்பாடு என்றே வர்ணிக்க முடியும். வாடகைத்தாய்மை பற்றி கலந்து பேசுவதற்காக ஒரு தம்பதியரை சந்திப்பதற்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு அதற்கும் மேலாக சில விஷயங்கள் தெரிய வந்தன.

வாடகைத்தாய்மை என்பது மனித வணிகத்தின் பொருள் வரையறையை பூர்த்திசெய்கிறதா?

மனித வணிகத்தில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் அவர்களது பலியாட்களை / பாதிக்கப்படக்கூடியவர்களை கவர்ந்து ஈரப்பதற்கும் மற்றும் கட்டாய வேலை அல்லது வர்த்தக ரீதியிலான பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பலவந்தம், மோசடி அல்லது வலுக்கட்டாயப்படுத்துதலை பயன்படுத்துகின்றனர். பொருளாதார கஷ்டம், இயற்கைப் பேரழிவு அல்லது அரசியல் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்படக்கூடியவர;களை அவர்கள் தேடி கண்டறிகின்றனர். பொது வெளியில் கூட தங்களை பாதிக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவோ அல்லது உதவி வேண்டும் என்று கேட்பதற்கோ கூட இயலாத நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும், பாதிப்பின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கக்கூடும்.

மனித வணிக வணிகத்தில் ஈடுபடும் நபர்கள் - அவர்களின் செயல்படும் விதம் :

1. ஒரு நபரை அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவது அல்லது அவர்கள் மீது வன்முறையை பயன்படுத்துவது.

2. உணவு, குடிநீர; அல்லது உறக்கம் போன்ற அடிப்படைத் தேவைகளை நபருக்கு மறுத்தல் அல்லது அவற்றிற்கு தீங்குவிளைவித்தல்;

3. காதலிப்பதாக அல்லது இணைந்து வாழ்வதாக பொய் உறுதிமொழிகளை தருதல்;

4. ஒரு நல்ல வேலை மற்றும் வீடு வாங்கித் தருவதாக பொய் உறுதி மொழியளித்தல்;

5.  நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் தொடர்பை கட்டுப்படுத்துதல்;

6.  நடமாட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல்;

7. ஒரு நபரின் அடையாளச் சான்று ஆவணங்களை தங்கள் வசம் வைத்துக் கொண்டு கட்டுப்படுத்துதல்;

8. நாடு கடத்தல் அல்லது சட்ட அமலாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தல்;

9. கடன் வாங்கியதாக கூறப்படும் தொகையை திரும்ப செலுத்துவதற்கு அந்நபரின் ஊதியத்தை எடுத்துக் கொள்ளுதல்;

10. சமய வழிபாடு நிகழ்வுகளில் கலந்து கொள்ள விடாமல் பாதிக்கப்படுபவரை தடுத்தல்.

வாடகைத் தாய்மை முறை, எளிதில் பாதிப்புக்கு ஆளாகுபவர்களை வேட்டையாடுகிறது; பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தை ஆபத்துக்கு உள்ளாக்குகிறது மற்றும் மனித வாழ்க்கையை வியாபாரப் பொருளாக்குகிறது.

வாடகைத் தாய்மை முறையில், வாடகைத் தாய்க்கு ஏற்படும் மருத்துவரீதியான, மனரீதியான மற்றும் சமூகரீதியான தீங்குகள் :

1. தேவை : உயர்கல்வித் திறனுடன் கூடிய, நல்ல தோற்றமுள்ள குழந்தை - குழந்தைகளை வியாபாரப் பொருட்களாக மாற்றுவது

2. மனரீதியாக பற்றின்மை

3. கருவுற்றிருக்கும் நேரத்தில் அச்சங்கள் மற்றும் வாடகைத்தாய்க்கும் மற்றும் ஒப்பந்தப் பெற்றோர்களுக்குமிடையே தொடரும் உறவுமுறையில் உள்ள சிக்கலான பிரச்சனைகள்.

4. சுரண்டல் : வாடகைத் தாய் நேசிக்கப்படுவார், உபயோகபடுத்திக் கொள்ளப்படுவார்; அதற்குப் பிறகு மறக்கப்பட்டுவிடுவார்.

5. குழந்தை பிறப்பிற்குப் பிறகு ஒப்பந்தப் பெற்றோர்களின் உணர்ச்சிப்பூர்வ போராட்டங்கள்.

6. எதிர்பாரா சிக்கல்கள் : ஒரு ஒப்பந்த பரிவர்த்தனையின் கீழ், பிறந்த குழந்தை வேண்டாத ஒரு பொருளாக ஆகும்போது

டீ. மனித வணிகம் மற்றும் வாடகைத் தாய்மை முறை : சுரண்டலின் எடுத்துக்காட்டுகள்.

பிறக்காத குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நாடும் பெற்றோர்கள் ஆகிய இருவரையும் பாதுகாப்பதற்காக வாடகைத்தாய் சட்டங்கள் இயற்றப்பட்டதாக கூறப்படுகின்றன. வாடகைத் தாய்மை முறையின் சுரண்டலுக்கான எடுத்துக்காட்டுகள், குழந்தைகள் மற்றும் பெண்ணுக்கு விளைவிக்கப்பட்ட மோசடிகளின் வேறுபட்ட ஒரு பின்னணியை வெளிப்படுத்துகின்றன துரதிருஷ்டவசமாக, நெறிமுறை சார்ந்த குழப்பங்களும் மற்றும் வாடகைத்தாய்மை பிரச்னைகளின் புதுத்தன்மையும் உள்ள நிலையில், பல மனித உரிமைக்குழுக்கள் வாடகைத்தாய்மையின் ஆபத்துகள் குறித்து தெரியாமலோ அல்லது நடுநிலையிலோ இருக்கிறார்கள். எடுத்துக் காட்டிற்கு, ஹியு+மன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய இயக்குநர; பில் ராபர்ட்சன் கூறுகையில், 'இந்தப் பிரச்னையின் புதிய தன்மையால் வேறுபலர; என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருப்பதைப்போலவே, அரசாங்கங்களும் முற்றிலும் புதிய ஒன்றை இதில் எதிர்கொள்கின்றன’ என்றார். 

1. குழந்தைகளை விற்பனை செய்யும் சதிச் செயல்கள்

2. 'கட்டாயப்படுத்தப்பட்டுள்ள’ வாடகைத் தாய்மை

மனித உரிமைகள் மற்றும் ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த கண்ணியத்தை பிரதிபலிக்கும் கோட்பாடுகளின் கீழ் வாடகைத் தாய்மை முறை தடை செய்யப்பட வேண்டும்:

வாடகைத் தாய்மை விஷயம் குறித்து குறிப்பாக கவனிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் இன்னும் ஒரு உடன்படிக்கையை உருவாக்காமல் இருக்கின்ற நிலையில், வாடகைத் தாய்மை முறை குறித்து ஒரு நிலையான நிலையை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு கட்டமைப்பை இது போன்ற பிற உடன்படிக்கைகள் சட்டக் கோட்பாடுகளை வழங்கியுள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது, மானுட கண்ணியத்தின் மிகவும் முக்கியமான அம்சமாகும்: உலகில் சுதந்திரம், நீதி மற்றும் அமைதியின் அடித்தளம் இது என்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் தெரிவிக்கிறது. 

ஐரோப்பாவிலுள்ள உடன்படிக்கைகள் முழுவதிலும், மானுட கண்ணியத்தை பாதுகாத்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளில் மனித வணிகத்தை/ஆட்கடத்தலை தடைசெய்தல், இயற்கை முறையில் கருத்தரித்தல் மற்றும் குழந்தை பிறப்பில் தலையிடுவதற்கு எதிராக குழந்தையின் சிறந்த நலனை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு சாதகமாக ஒரு பொதுக்கொள்கை இருக்கிறது. செயற்கை கருத்தறிப்பு முறை வழியாக உருவாக்கப்படும் ஒரு குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்கு எதிராக தடை மற்றும் மனிதர்களை குளோனிங் செய்வது மீது தடை ஆகியவற்றில் இது வெளிப்படுகிறது. ஏனெனில் இத்தகைய நடவடிக்கைகள் மனித கண்ணியத்திற்கு எதிரானவை.

ஒப்பந்த செயல்முறையில் சுரண்டல் வாய்ப்புத்திறன் இருப்பதாலும் மற்றும் வாடகைத் தாய்மை முறை வாடகைத் தாய் மற்றும் குழந்தை ஆகியோர், அவர்களது மனித கண்ணியத்தை மீறும் வகையில் ஒரு ஒப்பந்தத்தின் ஜடப்பொருட்களாக குறைப்பதாலும், இந்த நிலைநாட்டப்பட்ட கொள்கைகளை ஒட்டிய வகையில், அனைத்து நாடுகளும் வாடகைத் தாய்மை முறையை தடை செய்யும் ஒரு கொள்கையை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.

- ரோஸ்ஆன் ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com