வன்புணர்வு செய்ய முயற்சிப்பவனைக் கொலை செய்தால் சட்டம் என்ன செய்யும்? தெரிந்துகொள்ளுங்கள்!

வன்புணர்வு செய்ய முயற்சிப்பவனைக் கொலை செய்தால் சட்டம் என்ன செய்யும்? தெரிந்துகொள்ளுங்கள்!

பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிப்பவர்களைக் கொலை செய்தால் அப்பெண்களால் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா? இந்திய தண்டனைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொலைப்பழியில் இருந்து தப்ப வகையுண்டா?

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு சமூகத்தில் அனைத்து தரப்பிலும் மிகவும் உக்கிரமாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று உண்டென்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். இப்படி கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாமல் தன்னை நம்பிவந்த ஒரு பெண்ணை சில வக்கிரம் பிடித்த இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தவும், அவர்களை நிர்வாணப்படுத்தி விடியோ எடுக்கவும் முடியுமென்றால் அம்மாதிரியான சூழ்நிலைகளில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் மட்டும் ஏன் அஞ்சி நடுங்கிக்கொண்டு, கதறி அழுதுகொண்டு இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாதுகாப்புக்காக எச்சூழலிலும் எதிர்த்துப் போராடும் உரிமை கொண்டவர்கள் இல்லையா? தன்னை ஒரு ஆண் மானபங்கப்படுத்த முயற்சிக்கிறான் எனும்போது அப்பெண்ணுக்கு அவனைக் கொலை செய்யவும் சட்டத்தில் உரிமை உண்டு என்று சில பெண்ணுரிமை மற்றும் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்களே. இது நிஜமா? பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிப்பவர்களைக் கொலை செய்தால் அப்பெண்களால் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா? இந்திய தண்டனைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொலைப்பழியில் இருந்து தப்ப வகையுண்டா? இந்திய தண்டனைச் சட்டத்தின் செக்ஷன் 100 பிரிவு என்ன சொல்கிறது? என்று வழக்கறிஞர் ஒருவரைக் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்தான் இது.

சட்ட ஆலோசனையை வழக்கறிஞர் துணையுடன் பி.டி.எஃப். ஃபைலாகவே அளித்திருக்கிறோம். வயது வித்யாசமின்றி அனைத்துப் பெண்களும் ஓய்வு நேரத்தில் தங்களை பலாத்காரத்தில் இருந்து காத்துக்கொள்ளவல்ல செக்ஷன் 100-ஐ பற்றித் தரவிறக்கி நுணுக்கமாக அறிந்துகொள்ளுங்கள்.

இன்றைக்கு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நம் பெண்கள் அதைக் கண்டு கண்ணீர் வடித்துக்கொண்டு நெஞ்சுவெடிக்கக் கதறிக்கொண்டும் இருந்தால் மட்டும் போதாது. இனியாவது பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்புகளைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டு சட்டப்படி தமக்கான நியாயங்களை அடைய முயற்சிக்க வேண்டும்.

நன்றி: சட்ட ஆலோசனை மற்றும் தகவல் உதவி - வழக்கறிஞர் சி.பி. சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com