குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு
குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளில் காலியாக உள்ள 1,199 இடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை, நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட தாள்களுக்கு தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வு நடத்தப்படும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வாணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குரூப் 2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அனைத்து தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் ஆங்கில மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கும் மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள தேர்வாணையம், பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்தலும் கண்டிப்பாக தமிழில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 முதனிலைத் தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெறும். முதன்னை எழுத்துத்தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இருக்கும். 

குரூப் 2 தேர்வானது வரும் 11 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் தெரிவித்துள்ள தேர்வாணையம், குரூப்-2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com