ரயில்வேயில் வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான "குரூப் சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வேயில் வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!


தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான "குரூப் சி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Grop 'C' Post (Sorts Quota)

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ மற்றும் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக், தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விளையாட்டு திறன் மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.   

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.250. இதனை "Assistant Personnel Officer/HQ; South Western Railway, Hubballi" என்ற பெயரில் குறுக்குக்கோடிட்ட IPO-ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Personnel Officer (HQ), Railway Recritment Cell, 2nd Floor, Old G.M.S. Office Building, Club Road, Huballi - 580 023.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrchubli.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com