இங்கே கிளிக் செய்க.. இந்திய அணுசக்தி துறையில் தொழில்பழகுநர் பயிற்சி!

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் அளிக்கப்பட உள்ள தொழில்


இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trade Apprenticeship

காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 10
2. Welder (Guess & Electric) - 02
3. Turner - 02
4. Computer Network Technician - 02
5. Computer Operator & Programming Assistant - 02
6. Draftsmen (Machenic)- 02
7. Electronic Machenic - 10
8. Electrician - 04
9. Electroplater - 02
10. Machinic Motor Vehicle - 06
11. Machinist  - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 2017க்கு பின்னர் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

உதவித்தொகை: மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் www.rrcat.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcat.gov.in  என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com