பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்பு கிடங்கில் வேலை..!

பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்பு கிடங்கில் வேலை..!

மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு


மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 571

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Management Trainee (General) - 30
பணி: Management Trainee (Technical) - 01

சம்பளம்: மாதம் ரூ.50000-160000 

பணி: Assistant Engineer (Civil) - 18
பணி: Assistant Engineer (Electrical) - 10
பணி: Accountant - 28
பணி: Superintendent (General) - 88

சம்பளம்: மாதம் ரூ.40000-140000 (E-1)

பணி: Junior Superintendent - 155
சம்பளம்: மாதம் ரூ.11200-30600 

பணி: Hindi Translator - 03
சம்பளம்: மாதம் ரூ.11200-30600 

பணி: Junior Technical Assistant - 238
சம்பளம்: மாதம் ரூ.10500-28690

தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தகவல் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com