புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group B & Group C
காலியிடங்கள்: 70

பணி: Junior Hindi Translator - 03
தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் ஆங்கிலம், ஹிந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technical Assistant(Nuclear Medicine) - 02
தகுதி: Physics, Chemistry,Microbiology, Life Sciecnce போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technical Assistant(Urology) - 01
தகுதி: Medical Radiation Technology, Allied Health Science in Urology பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் 35,400

பணி: Nursing Officer - 06
தகுதி: Nursing பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-II - 03
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: MTS-Cobbler - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினரை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், பிசி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.pusucheery.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jipmer.puducherry.gov.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Group%20B%20%26amp%3B%20C%20posts%20-%20January%202019%20session.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com