வேலைவாய்ப்பு

இளைஞர்களே வாய்ப்பு உங்களுக்குதான் நழுவவிடாதீர்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!

ஆர். வெங்கடேசன்

வங்கியில் பணியாற்றுவதே தனது இலக்காகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 16

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Deputy Manager (Debit Card Operations) MMGS- Grade II - 01 
பதவி: Deputy Manager (Govt. e-Marketing) MMGS- Grade II - 01 

சம்பளம்: மாதம் ரூ.31705-1145/1-32850-1310/10-45950

வயதுவரம்பு: 27 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Manager (Debit Card Marketing) MMGS- Grade III - 01
பதவி: Manager (Smart City Projects) MMGS- Grade III - 03
பதவி: Manager (Transit / State Road Transport Corporation) MMGS- Grade III - 03 
பதவி: Manager (UPI & Aggregator) MMGS- Grade III - 07 

சம்பளம்: மாதம் ரூ.42020-1310/5-48570-1460/2-51490

வயதுவரம்பு: 28 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் MBA, PGDM, PGDBM தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191912-ADV-ENG.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

மோடி கூட்டம்: ஒரே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT