டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் தெரியுமா..? 

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் தெரியுமா..? 


தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மொத்த காலியிடங்கள்: 60

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant System Engineer
காலியிடங்கள்: 36

பணி: Assistant System Analyst
காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 

தகுதி: பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி,எம்பிசி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 35 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பதிவுக் கட்டணம்: ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளை பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 22.02.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com