ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

2019 ஆம் ஆண்டிற்கான ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு


2019 ஆம் ஆண்டிற்கான ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு: Indian Economic Service 
தேர்வு: Indian Statistical Service 

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள்  இருக்க வேண்டும் 

தகுதி: Indian Economic Service  பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Indian Statistical Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு துறைசார்ந்த பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/mainmenu2.php என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப பதிவு கட்டணம்: ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய தேதி: 20.03.2019 

தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2019 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.upsconline.nic.in வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com