ரிசர்வ் வங்கியில் மேனேஜராக பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்க இதோ விபரங்கள்!

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியில் மேனேஜராக பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்க இதோ விபரங்கள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

பதவி: Manager (Information Security) 
     
காலியிடங்கள்: 4

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Senior Manager (Information Security)  

காலியிடங்கள்: 4

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Manager (Information System Audit)  

காலியிடங்கள்: 6

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Senior Manager (Information System Audit)  

காலியிடங்கள்: 6

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு  உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

அனைத்துப் பதவிகளுக்கும் கல்வித்தகுதி:

கணினி அறிவியல்/ கணினி தொழில்நுட்பம்/ கணினி அறிவியல் & பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம்/ எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ இன்பர்மேஷன் செக்யூரிட்டி/ சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் பி.ஈ./ பி.டெக் அல்லது முதுகலைப் பட்டத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடனோ/ முதல் வகுப்பிலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CISA/ CISSP/ CISM / DISA /CCFP/CHFS/CEH சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன் அனுபவம் தேவை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

www.iob.in என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.500; எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100

மேலும் விவரங்களுக்கு:

www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDITOfficers.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04-08-2018.


மத்திய ஜவுளித்துறையில் வேலை

பதவி: முதுநிலை உதவியாளர் (நெசவு)

காலியிடம்: 1

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கைத்தறி நெசவு, தறி அமைத்தல் போன்ற பணிகளில் குறைந்தது மூன்றாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். கைத்தறி தொழில்நுட்பத்தில் மூன்றாண்டு டிப்ளமோ/கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் டிப்ளமோ/ கைத்தறி நெசவில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பதவி: இளநிலை உதவியாளர் 

காலியிடம்: 1

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், டெக்ஸ்டைல்ஸ் டையிங்/ பிரிண்டிங் டிரேடில் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்த பிறகு மூன்றாண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது) நெசவாளர் சேவை மையம்/ ஜவுளி, நெசவு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் 4 மாதங்களுக்குக் குறையாமல் படித்து, குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: உதவியாளர் (நெசவு)

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும், ஜவுளி நெசவு/ வைண்டிங்/ வார்பிங் துறைகளில் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்து, இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது) நெசவாளர் சேவை மையம்/ ஜவுளி, நெசவு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் 4 மாதங்களுக்குக் குறையாமல் படித்து, குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, சில பிரிவினருக்கு உச்சவரம்பில் விலக்கு உண்டு.

பணியிடங்கள்: சென்னை, காஞ்சிபுரம், சேலம், விஜயவாடா, கண்ணூர், ஹைதராபாத், பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை: www.handlooms.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: The Director, Weavers Service Centre, C.1.B, Rajaji Bhavan, Besant Nagar, Chennai - 600090.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்முறை தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

www.handlooms.nic.in/writereaddata/Advertisements/636657166217458720Advt%20for%20the%20posts%20in%20South%20Zone_2018.pdf என்ற  இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி:  6-08-2018.


ரிசர்வ் வங்கியில் வேலை

பதவி: Manager (Technical - Civil) in Grade ‘B

காலியிடங்கள்: 6

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கிணையான பட்டப்படிப்பில் எல்லா செமஸ்டர்களிலும் 60 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 

முன் அனுபவம்: உதவிப் பொறியாளர் நிலைக்குச் சமமான பதவியில் குறைந்து 3 ஆண்டு பணி அனுபவம்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Assistant Manager (Rajbhasha) in Grade ‘A

காலியிடங்கள்: 8

கல்வித்தகுதி: ஆங்கிலம்/ ஹிந்தி முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Assistant Manager (Protocol and Security) in Grade ‘A 

காலியிடங்கள்: 4

தகுதி: முப்படைகளில் கமெண்டர் நிலையிலோ அல்லது துணை ராணுவப் படைகளில் உதவி கமெண்டர் நிலையிலோ 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

பதவி: Assistant Librarian In Grade ‘A'

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: கலை/ வணிகம்/ அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டத்துடன் நூலக அறிவியல்/ நூலகம், தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். 

கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ முடித்தவர்கள், NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in  என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி/எஸ்.டி./ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு:

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT19072018E62D09A7 42E64F929B1FEB9C1D1D57D1.PDF என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09-08-2018.

தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com