இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய வெஸ்பா எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை பியாஜியோ குழுமம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறது வெஸ்பா நிறுவனம். தனது புதிய எலெக்ட்ரிகா பைக் ஒரு முறை முழு கொள்ளளவுக்கு சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை பயணிக்க கூடியது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.