புதன்கிழமை 14 நவம்பர் 2018

​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்

DIN | Published: 15th August 2018 09:17 PM

நாட்டின் 72வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.  மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வந்த மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுரேஷ்பிரபு, ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : ​செங்கோட்டை தேசியக் கொடி Modi Tricolour Prime Minister

More from the section

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு
தீபாவளி சரவெடி
தீபாவளி முன்னிட்டு இறுதிக்கட்ட ஷாப்பிங்
களைகட்டிய தீபாவளி ஷாப்பிங் கூட்டம்
புதிய வகை ரயில்களுக்கு வரவேற்பு