சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

இலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்

DIN | Published: 13th November 2018 11:52 AM

சென்னை ஐ.சி.எஃப். வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 13 பெட்டிகள் கொண்ட 6 நவீன டீசல் என்ஜின் ரயில்கள் இலங்கைக்கு அனுப்புவதற்காக இந்திய ரயில்வேயின் பொதுத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஐசிஎஃப் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ரயிலில் 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 2 உயர்வகுப்பு பெட்டிகளும்,  என்ஜின்களுடன் கூடிய 2 பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 810 பயணிகள் இதில் அமர்ந்து பயணிக்கலாம். ரயிலில் வசதிகளை பார்வையிடும் ஐ.சி.எஃப். பொது மேலாளர் எஸ்.மணி உள்ளிட்ட அதிகாரிகள்.

Tags : ஐசிஎஃப் ரயில் இலங்கை ICF new trains Sri Lanka

More from the section

மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்
நெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி
வெறிச்சோடிய கடற்கரை