முதல் நாளே முடிவை அறிந்த காந்திஜி!

மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது நாதுராம்
முதல் நாளே முடிவை அறிந்த காந்திஜி!


மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட விவரங்களை அவரது பேத்தி மனு காந்தி பின்வருமாறு கூறினார்:
பிரார்த்தனை மேடையின் படியில் மகாத்மாஜி ஏறும்பொழுது ஜனங்களின் வரிசையிலிருந்து கொலைகாரன் குதித்து முன்வந்தான். அவன் மகாத்மாஜியின் முன் குனிந்தான். அவருடைய பாதத்தூளியை எடுக்கத் தான் முயற்சிக்கிறான் என்று நினைத்தேன். அப்பொழுதும் காந்திஜி நடந்துகொண்டே இருந்ததால் அவனை அவ்விதம் செய்யாமல் தடுக்க முயன்றேன். அதற்குள் அவன் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து காந்திஜியை நோக்கி சுடத் தொடங்கினான். உடனே மகாத்மாஜி ஹே ராம், ஹே ராம் என்று ஜபிக்கத் தொடங்கிவிட்டார். மற்றொரு தோட்டாவும் அவருடைய வயிற்றில் பாய்ந்தது. மூன்றாவது தோட்டா மார்பில் பாய்ந்தது. உடனே அவர் மல்லாந்து வீழ்ந்தார். அவருடைய மூக்குக் கண்ணாடி சிதறிப் போயிற்று. காலில் இருந்த செருப்பு கழன்றுவிட்டது. 
காயங்களிலிருந்து ரத்தம் பொங்கிக்கொண்டு வந்தது. அண்ணலை நாம் இழந்து விட்டோம்.
தம்முடைய அந்திம காலம் நெருங்கி விட்டது என்பதை வியாழக்கிழமையன்று இரவே காந்திஜி அறிந்துவிட்டார் போலும். அன்று படுக்கைக்கு போகும் முன்பு குஜராத்திப் பாட்டு ஒன்றை பாடினார். வெள்ளிக்கிழமையன்று காலை எழுந்தவுடனேயே முக்கியமான கடிதங்களுக்கு பதில் எழுதிவிட வேண்டுமென்று கூறி, அவற்றைக் கொண்டுவரச் சொன்னார்.

தினமணி (01-02-1948)

தினமணி நாளிதழில் வெளியான (1934-1948) காந்திஜி குறித்த செய்திகளின் தொகுப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது 
- ஆசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com