முதுகு எலும்புக்கு வலு சேர்க்க 4 பயிற்சிகள்!

முதுகே உடைஞ்சு போச்சு அந்த அளவுக்கு வேலை என்றோ இருடா உன் முதுகெலும்பை உடைக்கறேன்
முதுகு எலும்புக்கு வலு சேர்க்க 4 பயிற்சிகள்!

முதுகே உடைஞ்சு போச்சு அந்த அளவுக்கு வேலை என்றோ இருடா உன் முதுகெலும்பை உடைக்கறேன் என்றோ இப்படி முதுகெலும்பை குறித்து பேசுவதன் காரணம் அது அந்தளவுக்கு முக்கியம் என்பதே. உடல் ஆரோக்கியத்தின் மூலதனமான முதுகெலும்பு வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். அதன் தசைகளை வலுவாக்க பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

அப்டாமினல் பிரேசிங்

  • முதலில் தரையில் மேட்டை விரித்துக் கொள்ளவும். 
  • முழங்காலை மடித்த நிலையில் நேராகப் படுத்துக் கொள்ளவும். 
  • வலது கையை நோக்கி இடது முழங்காலை கொண்டு வந்து கைகளால் அழுத்தம் கொடுக்கவும். 
  • இதே நிலையில் சில நொடிகள் இருக்கவும். 
  • இப்போது வலது கை மற்றும் வலது முழங்காலில் இதே போலச் செய்யவும். 
  • இடது பக்கம் 10 முறையும் வலது பக்கம் 10 முறையும் செய்யவும்.  

வயிற்றுப் பகுதி பயிற்சி

  • பாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்து வைத்துப் படுக்கவும். 
  • வயிற்று தசைப் பகுதியை இறுக்கியபடி, முகவாயை மார்பு பகுதி நோக்கி எடுத்து வந்து பக்கவாட்டில் லேசாக உருளவும். 
  • ஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும். 
  • இதை 10 முறை செய்யவும்.

இடுப்புக்கான பயிற்சி  

  • முழங்காலை மடித்துக் கொண்டு, கால்கள் லேசாக விலகிய நிலையில் மேலே பார்த்தபடி படுக்கவும். 
  • வலது கணுக்காலை இடது முழங்கால் மேலே போட்டுக் கொள்ளவும். 
  • கைகளால் வலது முழங்காலை கைகளால் இடது தோள்பட்டை அருகே கொண்டு வர முயற்சிக்கவும்.  
  • இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும். 
  • இதை இரண்டு பக்கத்திலும் மூன்று முறை செய்யவும்.

பிரிட்ஜ் பயிற்சி

  • முழங்காலை மடித்தபடி, கால்களை லேசாக விலக்கி படுத்துக் கொள்ளவும். 
  • தோள்பட்டை தரையிலேயே இருக்க, முதுகு மற்றும் பின் பகுதியை உயர்த்தவும். 
  • ஐந்து நொடிகளுக்குப்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வரவும். 
  • இதை 10 முறை செய்யவும்.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com