ஓவியாவின் டாட்டூவும் த்ரிஷாவும் டாட்டூவும்! டாட்டூக்களைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

ஓவியாவின் டாட்டூவும் த்ரிஷாவும் டாட்டூவும்! டாட்டூக்களைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

காலம் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை. அந்தக் காலத்தில் தன் மனத்துக்கு உகந்தவர்களின்

காலம் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை. அந்தக் காலத்தில் தன் மனத்துக்கு உகந்தவர்களின் பெயரை கைகளில் அல்லது தோளில் பச்சைக் குத்திக் கொள்வது கிராமப்புற மக்களின் வழக்கமாக இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலும் கூட தங்கள் மச்சானின் பெயரை ஆசை ஆசையாகப் பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. ஆழமான அன்பினை வெளிப்படுத்த  பச்சைக் குத்திக் கொள்ளும் இந்தப் பழக்கத்தின் நவீன பரிமாணம் தான் டாட்டூஸ். பதின் வயதினர், இளைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் டிசைன் டிசைனாக டாட்டூ குத்திக் கொள்வதை விரும்புகிறார்கள்.

டாட்டூஸ் குத்திக் கொள்வதில் இரண்டு வகை உண்டு. ஒன்று குத்திய சில மணி நேரங்கள் மட்டும் இருக்கும் தற்காலிகமான டாட்டூ. மற்றொன்று என்றென்றும் நிலைத்திருக்கும் நிரந்திர டாட்டூ. இதில் விதவிதமான டிசைன்கள், பெயர்களை டாட்டூவாகக் குத்திக்கொள்வதுதான் பேஷன். 

டாட்டூ குத்திக் கொள்வதன் காரணம்

சிலருக்கு தான் தனித்துவமானவன் என்று பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதில் தொடங்கி, காதல் சின்னமாகவும் அதனைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும், வேறு சிலர் ஃபேஷன் ட்ரெண்டிங் போன்ற காரணங்களுக்காகவும் குத்திக் கொள்கிறார்கள். 

ஆழமான அதிக வண்ணங்களையுடைய டாட்டூக்கள் சருமத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடியவை. அரிப்பு, அலர்ஜி போன்ற சின்ன பிரச்னைகள் முதல் சரும புற்றுநோய் வரை ஆபத்துக்கள் இதில் அதிகம் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

எங்கெல்லாம் டாட்டூ?

முகத்தைத் தவிர மற்ற எல்லா பாகங்களிலும் டாட்டூ குத்தி மகிழ்கின்றனர் இளசுகள். பொதுவாக முன் கைகள், விரல்கள், தோள்கள், மார்பு, நெற்றி, காதுகள் என தனக்குப் பிடித்த பகுதிகளில் டாட்டூ குத்திக் கொள்கின்றனர்.

என்ன மாதிரியான டாட்டூக்கள் பிரபலம்?

மனத்துக்கு நெருக்கமானவர்களின் பெயர், கடவுள் பெயர், ஓம் போன்ற வடிவம், புத்தர் உருவம், நாகம், சிங்கள் அல்லது சிறுத்தை அல்லது வேறு சில விலங்குகளின் உருவம், ஸ்வதிஸ்திக் டிசைன் அல்லது பிடித்த டிசைன்களை பெரும்பாலும் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். 

டாட்டூவால் என்ன பிரச்னைகள் ஏற்படும்?

பத்தில் இரண்டு சதவிகிதம் நபர்களுக்கு டாட்டூ குத்திய பின் சருமத்தில் பிர்ச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாட்டூ குத்திய பகுதிகளில் அரிப்பு, வீக்கம், நோய்த்தொற்று போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய டிஸ்போசிபிள் ஊசியைப் பயன்படுத்தி டாட்டூஸ் வரையப்பட வேண்டும். ஊசியை சரியாகத் சுத்தப்படுத்தாமல் அனைவருக்கும் அதையே பயன்படுத்துவதால் தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். பச்சை குத்தும் நிபுணர் நிச்சயம் கையுறை அணிந்திருக்க்க வேண்டும். சுகாதார முறையில், டாட்டூஸ் வரைவதில் தேர்ந்த கலைஞர்களிடம் குத்திக் கொள்வது நல்லது.

எப்படி குத்தப்படும்?

கார்பன், சைனா மை, இந்தியன் இன்க் போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை நிறத்தில் குத்துவார்கள். சிலவிதமான மருந்துப் பொருட்களின் சேர்க்கையும் பயன்படுத்தப்படுகிறது. டாட்டூ குத்துவதற்குத் தேவையான ரசாயனப் பொருட்களை கூர்மையான ஊசி முனையில் வைத்து, தோலின் மேல்புறத்தில் தீட்டுவார்கள். இது அந்தந்த ரசாயனப் பொருட்களின் சேர்க்கைக்கு ஏற்ப நிறம் மாறும். அது தோலில் ஊடுறுவி உள்ளே சென்றதும். நிலையாக அப்படியே இருந்துவிடும். மேலும் ஆழமாக உட்தோலில் ஊசியைச் செலுத்தினால், ஒருபோதும் அழியாதபடிக்கு நிரந்தரமாக இருக்கும். 

{pagination-pagination}

என்ன என்ன டாட்டூஸ் ஆபத்தானவை?

உடலில் ஒரு சில பகுதிகளில் டாட்டூ குத்திக் கொள்வது இயல்பு தான். ஆனால் சிலர் உடலின் முழுக்க டாட்டூ குத்திக்கொள்வார்கள். இது ஆபத்தை விளைவிக்கும். உடல் முழுவதும் உள்ள நரம்புகள் மீது ஊசி படுவதால், மெல்லிய ரத்தக் குழாய்கள் சேதம் அடையலாம். தவிர ரத்தக்கசிவு ஏற்பட்டு சீழ் பிடித்து புண்ணாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தி பச்சை நிறத்தில் தீட்டுகிறார்கள். காட்மியம், மெர்குரி, அயன் ஆக்சைட், பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் போன்ற ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன. சிவப்பு வண்ண டாட்டூவில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பதால், சருமத்தில் அதிக பாதிப்புக்கள் உருவாக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். உடல் நலக் குறைவால் ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உடல் முழுவதும் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவால் ஸ்கேன் தெளிவற்று காணப்படலாம்.

ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால், , ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள், ஹெச்.ஐ.வி., போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம். வைரஸ், காளான், பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள், சருமத்தில் உள்ள ஆழமான திசுக்களை பாதித்து, திசுக்களை சேர்த்து கட்டியாக்கிவிடும். நாளாவட்டத்தில் அந்தக் கட்டி புற்றுநோயாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.

ஆசையாக குத்திய டாட்டூவை அழிக்க முடியுமா?

சிலர் அவசரப்பட்டு நிரந்தர டாட்டூ குத்திவிட்டு அதன் பின் அது வேண்டாம் என நினைப்பார்கள். அவர்கள் டாட்டூவை அழித்தே ஆக வேண்டும் என நினைத்தால், லேசர் சிகிச்சை மூலமும் டெர்மாபரேஷன் சிகிச்சை மூலமும் நீக்கிவிட வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அவை ஆபத்தானவை. அதிகப் பணம் செலவாகும். சித்தா அல்லது ஆயுர்வேத முறையில் அகற்றும் வாய்ப்புக்கள் உள்ளன.

சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் தகுந்த மருத்துவர்களை அணுகி அதற்குரிய ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே டாட்டூவை அழிக்க வேண்டும். ஒருவருக்கு சரியாக இருக்கும் வைத்தியம் இன்னொருவரின் தோலை பதம் பார்த்துவிடலாம். எனவே மிகவும் கவனத்துடன் டாட்டூ விஷயத்தில் செயல்படுவது பாதுகாப்பானது.

பிரபலங்கள் யாரெல்லாம் டாட்டூ குத்தியிருக்கிறார்கள்?

பாலிவுட் நடிகைகள் பலர் டாட்டூ குத்தியிருந்தாலும் அதிகம் கவனம் பெற்றது தீபிகா படுகோனின் டாட்டூ. முன்னாள் காதலர் ரன்பீர் கபூரின் பெயரை டாட்டூவாக்கி காதலரைப் பிரிந்த நிலையில் லேலர் சிகிச்சை எடுத்து டாட்டூவை நீக்கினார் தீபிகா.

பிரியங்கா சோப்ரா தன் தந்தையின் மீதான அன்பைத் தெரிவிக்க 'டாட்ஸ் லிட்டில் கேர்ள்' என்று டாட்டூ குத்தியிருந்தார். பூனம் பாண்டே சச்சினின் உருவத்தை டாட்டூவாக குத்தியுள்ளார். 

{pagination-pagination}

கோலிவுட்டில் நயன்தாரா முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை இரண்டு கைகளிலும் டாட்டூ குத்தி அதை அழிக்க பெரும் பாடுபட்டுவிட்டார்.

குஷ்பு தனது மகள்களின் பெயரைக் டாட்டூவாக குத்தியிருக்கிறார்.

டாட்டூவின் தீவிர ரசிகை த்ரிஷா தான். முதலில் தன் மார்புப் பகுதியில் மீனின் உருவத்தை டாட்டூவாகக் குத்தியிருந்தார்.

கைகளில் ரிஷப ராசியின் அடையாளமாக காளை சின்னத்தை குத்தினார். சமீபத்தில் முதுகுப் பகுதியில் கேமராவுடன்  சினிமா கிளாப் போர்ட் சின்னத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.

மற்ற நடிகைகளில் ஷ்ருதி ஹாசன், சமந்தா, தாப்ஸி பன்னு, ஜனனி ஐயர், காயத்ரி ஜெயராம், நமீதா, பிரியா மணி ஆகியோரும் டாட்டூ பிரியைகள்.

நடிகர்களில் அமீர்கான், ஜெயம் ரவி, சூர்யா, ஆகியோர் சிக்ஸ் பேக் வைக்கும்போது டாட்டூவும் குத்திக் கொண்டவர்கள். சூர்யா தன் மனைவி பெயரை கைகளில் டாட்டூ குத்தியுள்ளார். தவிர திரைப்படங்களுக்காகவும் அவ்வப்போது டாட்டூ குத்தி அசத்துவார். உதயநிதி ஸ்டாலின் தன் குழந்தையின் பெயரை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் ஓவியா கூட டாட்டூ பிரியர்.

கோலிவுட்டில் சமீபத்தில் டாட்டூ குத்தியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 'காலா' படத்துக்காகத்தான் சூப்பர் ஸ்டார் அந்த டாட்டூவைக் குத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com