புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கிடைக்க இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துங்கள்!

DNS | Published: 20th August 2018 10:55 AM

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,73,252 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகள் கொண்டுள்ள தாய்மாா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : vitamin a children health health camp in chennai வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சென்னை மாநகராட்சி

More from the section

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!
மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம்'
செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்