செய்திகள்

குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி நீங்க

கோவை பாலா

அறிகுறிகள் : நமது உடலின் தட்பவெப்ப நிலையை சமன் செய்வது நம்முடைய நரம்பு மண்டலம். இந்த நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முரண்படும் போது நமது நுரையீரல் மற்றும் இரைப்பையில் மாற்றம் நிகழும் அதாவது குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி  இவற்றிலிருந்து விடுபட...

மண்டலம் - நரம்பு மண்டலம்
காய் - கொத்தவரங்காய் 
பஞ்சபூதம் - காற்று 
மாதம் - ஆனி
குணம் - எளிமை
ராசி/லக்கினம் - மிதுனம் 

சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : கொத்தவரங்காயுடன்(5) , பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புடலங்காய் (50 கிராம், தோல், விதையுடன்), மூன்றையும் நன்றாக கழுவி  நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி, வடிகட்டி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT