இந்த 7 வைட்டமின்களும் உங்கள் அழகை மேன்மேலும் மெருகேற்றும்! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!

இந்த 7 வைட்டமின்களும் உங்கள் அழகை மேன்மேலும் மெருகேற்றும்! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!

பொதுவாக வைட்டமின்கள் ஆரோக்கியத்திற்கானவை என்றே நினைத்திருப்பீர்கள்.

பொதுவாக வைட்டமின்கள் ஆரோக்கியத்திற்கானவை என்றே நினைத்திருப்பீர்கள். ஆரோக்கியமாக இருப்பதே அழகுக்கு அடிப்படை என்பதும் உண்மைதான். இந்த வைட்டமின்கள் ஆரோக்கியத்துடன் போனஸாக உடல் அழகையும் தருகின்றன. உங்கள் தோற்றம் இளமைப் பொலிவுடன் சிறக்க வேண்டுமெனில், இந்த 7 வைட்டமின்கள் உள்பட பிற வைட்டமின் சத்துக்களையும் உங்கள் அன்றாட உணவில் சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் வைட்டமின் சத்துக்கள்தான் இளமைக்கு உத்திரவாதம் தரும் வேலைகளைச் செய்கின்றன. அதாவது உடலில் செல்களைப் புதுப்பிக்கத் தேவையான கலோரிகளை பெறுவதற்கு இந்த வைட்டமின்கள் உதவி செய்கின்றன. உடலிலுள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும் வைட்டமின்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

வைட்டமின் பி1

சிலர் அறுபதி வயதிலும் அதிக முதுமையடையாமல் எனர்ஜியுடன் இருப்பார்கள். ஆனால் சிலர் முப்பது வயதிலேயே முதிர்ச்சியாகக் காணப்படுவார்கள். சிலருக்கு நாற்பதுகளில் முதிய தோற்றம் வதுவிடும். இதற்குக் காரணம் தயமின். இது இளம் வயதில் முதுமையாகக் தோற்றமளிப்பதை பி1 என்ற வைட்டமின் தடுக்கும். கோதுமை,  ஓட்ஸ், சிவப்பு அரிசி, சோயா, முந்திரிப் உள்ளிட்ட உணவில் இது அதிகமாகக் கிடைக்கும்.

வைட்டமின் பி2

இளமையான தோற்றத்துக்கு முதலில் நீங்கள் அக்கறை எடுக்க வேண்டியது சருமத்துக்குத்தான். அதற்கு வைட்டமின் பி12 அதிகம் உதவு. சருமத்தில் புத்துணர்வுக்கு இது மிகவும் முக்கியம். பால், பச்சைக் காய்கறிகள், முட்டை,  மீன், இறைச்சி, தானியங்கள் ஆகியவற்றில் பி12 அபரிதமாகக் கிடைக்கும்.

வைட்டமின் பி3 & பி4

இந்த வைட்டமின் சத்தை நியாசின் என்றும் சொல்வார்கள். இதன் முக்கிய செயல்பாடு மாவுச் சத்தை கிரகித்துக் கொள்ளும். மேலும் உடலிலுள்ள இறந்த செல்களை அழிப்பதுடன் அவற்றை நீக்கி புது செல்களை உருவாக்கும். கொலீன் எனும் வைட்டமின் பி4 நிறைந்த உணவுகள், ஒரு சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை. உணவியல் நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனை பெறுவது நலம்.
 

கோதுமை, சிவப்பு அரிசி, நட்ஸ், பட்டாணி, கீரை மீன், கோழி இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளில் இச்சத்து கிடைக்கும்.  

வைட்டமின் பி5

சருமத்தை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு பி5 வைட்டமின்கள் உதவுகின்றன. முகப்பரு உருவாகாமல் தடுப்பதற்கும் இந்த வைட்டமின்கள் உதவும். சீஸ், தக்காளி, முட்டைகோஸ், மக்காச்சோளம், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இந்தச் சத்து பெருமளவில் கிடைக்கிறது.

வைட்டமின் பி6 

குளிர்காலத்தில் சிலருக்கு அதிகமாக தோல் வறட்சி அகையும். அல்லது உரிந்துவிடும். இந்தப் பிரச்னைகளை சரி செய்ய வைட்டமின் பி6 உதவும். நட்ஸ், உலர் திராட்சை, வேர்க்கடலை, ஏலக்காய், பச்சை பயிறு, வாழைப்பழம், பருப்புக்கள், முழு தானியங்கள், போன்றவற்றில் கிடைக்கும்.  

வைட்டமின் பி7

தலைமுடி அடர்த்தியாக வளரவும், நகம் மற்றும் சருமம் பொலிவுடன் இருப்பதற்கு உதவக் கூடியது வைட்டமின் பி7 ஆகும். இவை தக்காளி, கேரட் உள்ளிட்ட பச்சைக் காய்கறிகள், மாதுளம் பழம், நட்ஸ், சீஸ், பயறு, கிழங்கு, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும்.
 

புகைப்படம் நன்றி : லைஃப் இதழ் - நடிகை கொல்ஷிவ்டெ ஃபராஹனி (Golshifteh Farahani) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com