செய்திகள்

தூக்கமின்மையால் உண்டாகும் தலைவலிக்கு உடனடி தீர்வு

கோவை பாலா

மண்டலம் -  வாயு மண்டலம்

காய் - புடலங்காய்
                                
பஞ்சபூதம்  - காற்று

மாதம்   -  ஆடி

குணம் - தியாகம் 

சத்துக்கள்

புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தலைப்பு  :   தலைவலி

அறிகுறிகள் - தூக்கமின்மையால் உண்டாகும் தலைவலி

தீர்வு    

இரவு வேளை உணவாக, 150 கிராம் அளவுக்கு புடலங்காயை எடுத்து நன்றாக கழுவி தோலுடன் பொடியாக நறுக்கி மிளகு (2), தக்காளி (1), எலுமிச்சம் பழம் தோலுடன் (அரை பழம்) சேர்த்து  மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து  இரவு வேளை உணவாக குடிக்கவும்.

பின்பு பசித்தால் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்

(தேவைப்படுமெனில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்)

இரவு படுக்கப் போகும் முன்
 
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
 
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT