செய்திகள்

உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்!

உமா பார்வதி

உங்கள் சமையல் அறையில் சிறிய டவல்களை (கைப்பிடித் துணி / கரித்துணி) பயன்படுத்துகிறீர்களா? பாக்டீரியாக்களின் கூடாரமான, அதனால் ஃபுட் பாய்ஸன் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாத்திரங்களை துலக்கியதும் ஈரத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணி, அடிக்கடி கைகளைத் துடைக்க உபயோகிப்படும் டவல், தரையைத் துடைக்க பயன்படுத்தப்படும் துணிகள், என என எல்லாவற்றிலும் மிக அதிக அளவில் பாக்டீரியாக்கள் நீக்கமற உள்ளனவாம்.

கோலிஃபோர்ம்ஸ் (Coliforms (Escherichia coli) என்றழைக்கப்படும் இந்த வகை பாக்டீரியாக்கள் மிக அதிகளவில் கிச்சனில் பயன்படுத்தப்படும் கரித்துணிகளில் தான் உறைந்துள்ளது. அதுவும் அசைவம் சாப்பிடுவோரின் சமையல் அறைகளில் அவை இன்னும் அதிக அளவில் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் சமையல் அறையில் நுண் கிருமிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது எனவும், சுத்தமும் சுகாதாரமும் இல்லாத கிச்சன்கள் எல்லாம் பாக்டீரியாக்களின் உறைவிடமாக மாறும் என்று கூறியுள்ளார் மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுசீலா டி.பிராஞ்சியா-ஹுர்டயல்

மேலும் அவர் கூறுகையில், 'புட் ஃபாய்ஸனிங் ஏற்பட ஒரு முக்கிய காரணம் உணவு பரிமாறப்படும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஈரமான சமையலறை துண்டுகளின் மூலம் பரவும் கிருமிகள்தான். இவை உடல் நலப் பிரசனைகளை உருவாக்குவதில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கண்டறியப்பட்டது’ என்றார்.

மேலும் குறைந்த சமூக பொருளாதார நிலைமைகள் உள்ள குடும்பங்களிலும், அங்குள்ள குழந்தைகளுக்கும் எஸ்.ஆர்யூஸ் S. aureus (பாக்டீரியாவின் தாக்குதலால் ஏற்படும் நோய்த்தொற்று) அதிக விகிதத்தில் காணப்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புக்கள் ஏற்படும், இதனை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்திவிடும்.

கோலிஃபார்ம் மற்றும் எஸ்.ஆர்யூஸ் ஆகியவை அசைவ உணவுப் பொருட்களை உட்கொள்ளும் குடும்பங்களில் கணிசமான அளவில் அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டன.

ஈஸ்செரிச்சியா கோலி எனும் நுண்கிருமி மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளை உருவாக்கிவிரும். ஈஸ்செரிச்சியா கோலி (Escherichia coli ) எனும் நுண் கிருமி மனித குடலில் தாவரம் போல் படிந்திருக்கும் ஒரு சாதாரண பாக்டீரியாவாகும். சுகாதார நடைமுறைகளின் கவனம் இல்லையெனில் இப்பிரச்னை ஏற்படுகிறது. இது மனிதக் கழிவுகளில் பெருமளவில் வெளியேறிவிடுகிறது. 

அசைவ உணவுகளை சமைக்கும் போதும், பரிமாறும் போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். சமையல் அறையை உடனுக்குடன் சுத்தப்படுத்திவிட வேண்டும். சமையல் அறையில் உணவுப் பொருட்களை கையாளும் போது, ​​சில தவறான பழக்கவழக்கங்களால் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது’ என்று சுசீலா கூறினார்.

ஜோர்ஜியாவில் நுண்ணுயிரியல் பற்றிய அமெரிக்க சங்கத்தின் வருடாந்தர கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஒரு மாதம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட 100 சமையலறை துண்டுகளைச் சேகரிக்கப்பட்டனர் ஆய்வுக் குழுவினர்.

அவற்றில் 49 சதவிகிதத் துண்டுகள் பாக்டீரியா வளர்ச்சியைக் கொண்டிருந்தன, இந்த சதவிகிதம் பெரிய குடும்பம் மற்றும் குழந்தைகள் அதிகம் இருக்கும் குடும்பங்களில் சற்று அதிகமாக காணப்பட்டது.

மேலும் 49 துணிகள் பாக்டீரியா வளர்ச்சிக்கான சாதக அம்சங்களைக் கொண்டிருந்தன. 36.7 சதவிகிதம் கோலிஃபார்ம்கள், 36.7 சதவிகிதம் எண்ட்கோக்கோகஸ் ஸ்பிபி மற்றும் 14.3 சதவிகிதம் எஸ். ஏரியஸ் என்ற வகை பாக்டீரியாக்கள் காணப்பட்டன.

'ஈரமான துண்டுகள் மற்றும் சமையலறை கைப்பிடித் துணிகளின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள பெரிய குடும்பங்களில் சமையல் அறை சுகாதாரம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’ என்றும் சுசீலா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT