செய்திகள்

உங்கள் நினைவாற்றல் அதிகரிக்க இது ஒரு அருமையான வழி! 

கோவை பாலா

கீரை :  வல்லாரை  சர்பத் 

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை - அரை கிலோ
ரோஜாப் பூ - கால் கிலோ
செம்பருத்திப் பூ - கால் கிலோ
ஏலக்காய் - 10 கிராம்
கற்கண்டு - அரை கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்

செய்முறை : வல்லாரைக் கீரை, ரோஜாப்பூ, செம்பருத்திப் பூ, ஏலக்காய் இவை நான்கையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சாற்றுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவு சுண்ட வைக்கவும். பின்பு இதனுடன் கற்கண்டை தூளக்கி சேர்த்து  மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT