செய்திகள்

ஆசனக் குழாய் சுருக்கம், ஆசனவாய் எரிச்சல், உடல் சூடு, முதுகு வலி அனைத்தும் சரியாக

கோவை பாலா

காய் : வெண்டைக்காய்

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தீர்வு : பிஞ்சு வெண்டைக்காய் (5 கிராம்), வெந்தயம் (100 கிராம்), சிறுபருப்பு (50 கிராம்), சீரகம் (10 கிராம்), உளுந்தம் பருப்பு (50 கிராம்), புதினா இலை (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக வேக வைத்து பின்பு கடைந்து களி போல் செய்து ஒரு வேளை உணவாகவோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதுமோ சாப்பிட்டு வரவும்.

மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை நீராவியில் வேக வைத்து அதனுடன் தேங்காயை நிறைய துருவி சேர்த்து கலந்து பொரியலாகவோ அல்லது பச்சையாகவோ  நிறைய  சாப்பிட்டு வரவும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT