பல் வலி மற்றும் வீக்கம் ஏற்படாமல் தடுக்க வழிகள் உள்ளதா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகமும் கூட அழகாக இருக்க வேண்டும்
பல் வலி மற்றும் வீக்கம் ஏற்படாமல் தடுக்க வழிகள் உள்ளதா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகமும் கூட அழகாக இருக்க வேண்டும் எனில் பற்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். பல் போனால் சொல் போச்சு என்ற சொல்லாடலும் உண்டு. எனவே ஒருவரின் அழகை மட்டுமல்லாது, பேச்சுக்கும், ஆயுசுக்கும் தேவை உறுதியான பற்கள். அதனை எவ்வகையில் பாதுகாக்க முடியும் என்று இந்த நேர்காணலில் பல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஆர்.சிவபிரகாஷ் விளக்குகிறார்.

வேர் சிகிச்சை என்றால் என்ன?

நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படும், இந்த நிலைமையில், பல் மருத்துவர் பல் வலியை சரி செய்ய பல்லினை சிறு துளை செய்து பல்லின் உட்பகுதியில் சுத்தம் செய்தலே வேர் சிகிச்சை எனப்படும்.

பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க என்ன வழிகள்?

முன்பே சொன்னது போல வலி ஏற்படும் நிலை வருவதற்கு முன்பராமரிப்பு செய்வதன் மூலம் பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க முடியும்.

பல் வேர் சிகிச்சையால் என்ன பலன்? 

பல் வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல் எடுக்காமல் சரி செய்யும் வாய்ப்பு உள்ளது.

வேர் சிகிச்சை செய்தால் எல்லா நிலைகளிலும் சொத்தை ஏற்பட்ட பல்லைக் காப்பாற்ற முடியுமா?

பல்லின் பாதிப்பு அதிகம் ஏற்படும் போது பல் மருத்துவர் முடிவின் படி வேர் சிகிச்சை செய்து சரி செய்யப்படும். அதிகளவில் பல் சேதம் இருந்தால் பல் எடுக்க நேரிடும்.

வேர் சிகிச்சையை ஒரே நாளில் செய்து விட முடியுமா?

சில நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேர் சிகிச்சை ஒன்று அல்லது இரண்டு வெவ்வேறு நாட்களில் செய்து முடிக்க முடியும்.

வேர் சிகிச்சைக்கு பின்னர் பல் மீது கேப் (செராமிக்) போடுவது அவசியம்தானா?

பல் வேர் சிகிச்சைக்குப் பிறகு பல்லின் உறுதி குறைந்தது விடுவதால், பல்லின் உறுதியை அதிகரிக்க கேப் போட்டுக் கொள்வது அவசியம்.

பல் மீது கேப் (செராமிக்) எத்தனை விதங்களில் உள்ளன?

செராமிக் பல்லானது இதற்கு பிரத்யேக லாப்களில் செய்ய வேண்டும். இது 5 விதமாக பிரிக்கப்படுகிறது. பல் மருத்துவர் ஆலோசனை கேட்டு உங்கள் கேப் (செராமிக்) தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேர் சிகிச்சை வலி உண்டாக்குமா?

முறையாக வேர் சிகிச்சை செய்யும் ஒரு நாள் முன் சில மருந்துகளை பல்லுக்கு துளை செய்த பின் வைப்பதன் மூலம் வலி இல்லாமல் செய்ய முடியும்.

வேர் சிகிச்சை செய்யப்பட்ட பல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

என் அனுபவத்தில் வேர் சிகிச்சை செய்து பல வருடங்களுக்கு பல்லினை எடுக்காமல் பராமரிப்பு செய்யலாம்.

வேர் சிகிச்சை செய்து கேப் பொருத்தப்பட்ட பல், இயற்கை பல் போல உண்ண பயன்படுமா?

வேர் சிகிச்சை செய்து கேப் பொருத்தப்பட்டபல், இயற்கை பல் போல உண்ண நிச்சயமாக பயன்படும்.

வேர் சிகிச்சை செய்யப்பட்ட பல் இயற்கை பல் போலத் தோற்றம் அளிக்குமா?

வேர் சிகிச்சை செய்யப்பட்ட பல் இயற்கை பல்லுக்கு கேப் (செராமிக்) போட்ட பின்னர் நிச்சயமாக இயற்கை போன்று தோற்றம் அளிக்கும்.

வேர் சிகிச்சை செய்து சரி செய்வதும், பல்அடைத்தலும் ஒன்றா?

பல் அடைத்தலும் வேர் சிகிச்சையும் பற்களின் சொத்தையின் ஆழம் பொருத்து பல் மருத்துவரால் முடிவெடுக்கப்படும்.

அடைப்பதா, வேர் சிகிச்சை செய்வதா என்று கண்களால் பார்த்து முடிவு செய்யமுடியுமா?

சொத்தை ஏற்படும் பற்களின் ஆழம் கண்ணால் பார்த்து அடைப்பபதா அல்லது வேர் சிகிச்சை செய்வதா என்று முடிவு செய்ய இயலாது எக்ஸரே (x Ray) எடுப்பதன் மூலம் ஆழம் பரவி இருப்பதை அறிந்து முடிவு எடுக்க வேண்டும். பல் மருத்துவரை இதற்காகவே 6 மாதம் ஒரு முறை பார்த் துபயன் பெற நேரிடுகிறது.

அடைக்கப்பட்ட பல், வே ர்சிகிச்சை செய்வதை தடுக்க உதவுமா?

அடைக்கும் நிலையிலிருந்து வேர் சிகிச்சை நிலைக்கு செல்ல ஒன்றிரண்டு ஆண்டுகள் நேரம் எடுக்கும். இதனால் நிச்சயமாக சரியான நேரத்தில் பல் அடைத்தால், வேர் சிகிச்சை செய்வதை தடுக் கஉதவும். பல் மருத்துவரை இதற்காகவே 6 மாதம் ஒரு முறை பார்த்து பயன்பெற நேரிடுகிறது .

பல் அடைத்தலுக்கு சரியான நேரம் எப்படி நாம் தெரிந்து கொள்ளமுடியும்?

பல் அடைப்பதற்கு சரியாக உங்களுக்கு பல் மருத்துவர் கண்டுபிடித்து உதவ வேண்டியிருக்கும். உதாரணமாக உங்கள் மேல் நாடி பற்களுக்கு சொத்தை ஏற்பட்டு வலி ஏற்படும் போது மட்டுமே உங்களுக்கு உணர நேரிடும். பல் மருத்துவர், இதனை முன்னதாகவே கண்டுபிடித்து சரி செய்யமுடியும். பல் மருத்துவரை இதற்காகவே 6 மாதம் ஒரு முறை பார்த்து பயன்பெறுவது அவசியம் ஆகிறது.

பல் அடைத்தல் நிலைக்கும் வேர் சிகிச்சை நிலைக்கும் இடைப்பட்ட காலம் எத்தனை காலம் எடுக்கும்?

பொதுவாக அடைக்க முடியும என்ற நிலையில் இருக்கும் பல் சொத்தையானது, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் கழித்தே வேர் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க

  • நேரம் மாற்றம் இல்லாமல் உணவு உட்கொள்ள வேண்டும்
  • பல் இரு முறை, தவறாமல் துலக்க வேண்டும்
  • தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.
  • கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை, கொய்யா, வாழைப்பழம், எள் போன்ற உணவு உட்கொள்ள வேண்டும்.
  • கடினமான உணவு வகைகளை நன்றாக மென்று கடித்து உண்ணும் பழக்கம் வேண்டும்

குடும்பத்தில், பரம்பரையாக சொத்தை ஏற்படுமா?

ஆம், குடும்பத்தில் பரம்பரையாக‌த் தாக்கமும் உண்டு. தவறாமல் பல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

- டாக்டர்.ஆர்.சிவபிரகாஷ், டென்டல் சர்ஜன் (9840401520) Dr.Smilez.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com