செய்திகள்

வயிற்றுப் பொருமலால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து

கோவை பாலா


பொடுதலைக் கீரை - பூண்டுக் கறி

தேவையான பொருட்கள்

பொடுதலைக் கீரை - 100 கிராம்
பூண்டு (பெரியது) - 5
துவரம் பருப்பு - 100 கிராம்
மிளகு - 10 கிராம்
கடுகு - ஒரு ஸ்பூன்
நெய் மற்றும் உப்பு -  தேவையான அளவு
கடலைப் பருப்பு -  2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் கீரையை சுத்தம் செய்து அதனுடன் துவரம் பருப்பு  மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து  வேகவைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதனுடன் கடலைப் பருப்பை சிவக்க வறுத்து கடுகைப் போட்டு வெடித்ததும் அதில் பூண்டை உரித்துப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பின்பு மிளகையும் தூளக்கி சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். கடைந்து வைத்துள்ள கீரையையும், பருப்பையும் போட்டுப் பிரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி கொள்ளவும்.

பலன்கள் : இந்த பொடுதலை பூண்டு கறி கீரையை வயிற்றுப் பொருமலால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த அரு மருந்தாகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT