செய்திகள்

எந்நேரமும் கோபம், ஞாபக மறதியா! மூளை மழுங்கல் பிரச்னையாக இருக்கலாம்!

தினமணி


மூளை மழுங்கல் பிரச்னை காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்த என்  60 வயது  தந்தை ஊர் திரும்பிய பிறகு, வீட்டிலுள்ள அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறார். எந்நேரமும் கோபம், ஞாபக மறதி, ஊதாரித்தனம், தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், வெறித்த பார்வை போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். மூளை மழுங்கலுக்கும் மற்ற பிற உபாதைகளுக்கும் மருந்துண்டா?

ஷேக்தாவூது, காரைக்கால்.

வயோதிகத்தில் மூளைத்திறன் குறையாதிருக்கவும் இளமையை மீட்டெடுக்கவும் வகை செய்யக் கூடிய சில அற்புத மூலிகை மருந்துகளாகிய பிரம்மீ, வசம்பு, அபராஜிதா, ஜடாமாஞ்சி மற்றும் ஏலக்காயின் நுண்ணிய தூள் ஆகியவற்றின் கலவை தற்சமயம் இனிப்புச் சுவையுடன் கூடிய டானிக் வடிவில் வரத் தொடங்கியுள்ளது. 'சிரப் ஜெனிகாட்' என்ற பெயரில் கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை இம்மருந்தை விற்பனை செய்கிறது.  சுமார் 10 மி.லி. காலை மதியம் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, அதனை வேகமாக பிராணவாயுவானது தன்னகத்தே இழுத்துக் கொண்டு மூளைக்குச் சென்று அதன் வீர்யத்தைப் பரப்புகிறது. மூளையைச் சார்ந்த "தர்ப்பகம்' எனும் கபம், இம்மருந்துகளின் வீர்யத்தை வரவேற்று, மூளையின் உட்பகுதிகளில் அடங்கியுள்ள திரவங்களையும் உணர்வைத் தூண்டும் நரம்புகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் போஷாக்கை ஏற்படுத்தித் தருகிறது. இப்படி போட்டிபோட்டுக் கொண்டு செயல்படும் பிராண வாயுவும், தர்ப்பகக் கபமும் குணம் மற்றும் செயல்களில் வேறுபட்டிருந்தாலும், நல் மருந்துகளின் உள் வரவை சிறிதும் சுணக்கமில்லாமல் உடல் நன்மைக்காக கை கோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன.

எதிலும் கூர்ந்து கவனித்து நிதானித்துச் செயலாற்றும் திறமைக்கு காரணமாக இருந்த மனித மூளை, இன்று பல விஷயங்களில் நாட்டம் கொள்கிறது. விருப்பமின்றி திணிக்கப்பட்ட ஒரு செயலைச் செய்யும் போது, அதிலுள்ள நாட்டமின்மையால் அச்செயல் பாராட்டப்படுவதில்லை. வீட்டினுள்ளேயே செய்யப்படும் சமையலாகட்டும் - துணி துவைப்பதாகட்டும், 'எல்லாம் ஆகட்டும்' என்ற நிலையில் இருக்கிறதே தவிர, விருப்பத்துடன் ஆகட்டும் என்ற எண்ணம் குறைந்திருக்கிறது. ஆழ்ந்த பற்றுடன் பிறர் மீது கொண்டிருந்த பாசம், இன்று வெறும் மேலோட்டமாக ஆனதிற்குக் காரணம், இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையே. ஒருவர் மற்றவருடன் பேசும் போதே, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ, கைபேசியையோ பார்த்துக் கொண்டே பதிலளிக்கிறார். இதனால் பேசுபவருக்கு ஏற்படும் வருத்தத்தைக் கூட மற்றவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எல்லாவற்றிலும் அவசரம், குடும்பத்திற்குள் சண்டை, உறவுகளில் விரிசல், அன்பற்ற தன்மை என வேண்டாத சூழ்நிலை முற்றியதற்குக் காரணமே, இளைய சமுதாயம் முன்னோர் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கை முறை பற்றி விளக்கம் கேட்காமல் போனதால்தான். தாயும் தந்தையும் தம்முடைய இறுதிக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்ததும் பிள்ளைகளை அருகே அழைத்து எத்தருணத்திலும் ஒருவர் மற்றவரை விட்டுவிடாமல் என்றும் அன்புடனும் அனுசரணையுடனும் வாழ வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற வேண்டும். இது காலத்தின் கட்டயமாகிவிட்டது.

ஆதிசங்கரர் - 'அமேதúஸôஹி ஸ்ரீரனர்த்தாயைவ பவதி'' என்கிறார். புத்தி மேதையில்லாதவணுடைய செல்வம் எல்லாம் அனர்த்தத்தையே உண்டாக்கும். அதனால் 'ஆளைத்தேடி ஆஸ்தியைத் தேடு' என்ற சொல்லிற்கு ஏற்ப, புத்தியை (மேதை) தேடி விட்டுத் தான் செல்வத்தைத் தேட வேண்டும் என்று நமது வேத சாஸ்திரங்கள் உபதேசித்திருக்கின்றன.

ஆளைத் தேடுவதற்கான சில ஆயுர்வேத மருந்துகளாகிய சாரஸ்வதகிருதம், கல்யாணககிருதம், பஞ்சகவ்யகிருதம் போன்ற நெய் மருந்துகள், சாரஸ்வத சூரணம், சாரஸ்வதாரிஷ்டம் மானஸமித்ரம் எனும் குளிகை, பிராம்மீதைலம் எனும் தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் மூலிகைத் தைலம் போன்றவற்றின் பெருமையை வரும்காலம் பறைசாற்றும்! உடல் உபாதைகளைக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இன்று பல வந்துவிட்டாலும் மனதைச் சார்ந்த காமம் - குரோதம் - சோகம் - லோபம் - மோகம்} ஈர்ஷ்யா எனும் பொறாமை - அஸþயா எனும் பிறர் புகழ் கண்டு வெதும்பும் நிலை - பயம் - தைன்யம் எனும் தனக்கு சுகம் தரும்பொருட்கள் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் - மாத்ஸர்யம் பிறர் படிப்புத்திறமை, நுட்பமான அறிவு உள்ளவர்களை சந்திக்கவே பிடிக்காமை} ஹர்ஷம் எனும் தன்னிடம் இல்லாத பொருள் கிடைத்ததும் தலைகால் தெரியாது துள்ளிக் குதித்தல் - அகங்காரம் போன்றவை வளர்ந்து மனிதவர்க்கத்தை ஆக்ரமிக்கக் கூடிய நிலை நெருங்கிக் கொண்டிருப்பதால், ஆயுர்வேத மருந்துகளுக்கான வரவேற்பு இனியும் கூட விருக்கிறது!  

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT