வலி தீரும் வழிகள்!

9. கழுத்து பட்டை(cervical collar) அணிவது ஏன்?

டாக்டர் செந்தில்குமார்

கழுத்து வலி வந்தவர்களுக்கு கழுத்துப் பட்டை என்ற cervical collar பற்றி நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. கடுமையான கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் நிவாரணமாக கழுத்து பட்டையை எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். கடுமையான கழுத்து வலி என்னென்ன காரணங்களால் வரலாம் இதனை யார் யார் அணிய வேண்டும் என்று பார்க்கலாம்.

நீங்கள் உபயோகிக்கும், தலையணை கழுத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் இறுக்கம் அல்லது தளர்ந்து போதல். இரண்டாவதாக, நீங்கள் அமர்ந்து கொள்ளும் நாற்காலி, படுத்து உறங்கும் அமைப்பு இது போன்ற பலவேறு காரணங்கள் இளமையில் கழுத்து வலி வர காரணமாக இருக்கிறது. ஆனால் கழுத்து எலும்பு தேய்மானம் என்பது முதியவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலும் ஏற்படுகின்றது. மேற்கூறிய காரணங்கள் அதை துரிதப்படுத்திவிடுகிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 10% முதல் 14% பேர் கழுத்து வலியால் பாதிக்கபடுவாதாகவும் இதனால் மருத்துவ செலவீனங்கள் அதிகரிப்பாதாகவும் ஆய்வுகள் கூறிகின்றன.

கழுத்து எலும்புகள் தேயுமா?

இது ஒரு முக்கியமான கேள்வி, கழுத்து எலும்புகள் அல்லாத கால் எலும்புகள் தேய்வது முதுகு எலும்புகள் தேய்வது என்ற பொதுவான மருத்துவ விளக்கங்கள், மருத்துவர்களால் நோயாளிகளுக்குப் புரியும் வண்ணம் கூறவே உபயோகிக்கப் படும் ஒரு வார்த்தை, கழுத்து எலும்புகள் தேய்வது என்பது ஆங்கிலத்தில் DEGENERATION என்று கூறுவார்கள். அதாவது எலும்புகளில் கால்சியம் சத்தின் அளவு குறைந்து தனது வலுவை இழந்து எடையை தாங்கும் அமைப்பு சிதையும் போது எலும்புகள் தன்னை தற்காத்து கொள்ள உடலில் உள்ள எடையை தாங்கும் எலும்புகள் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகும், இதனையே மருத்துவர்கள் உங்களுக்குப் புரியும் வண்ணம் எலும்புகள் தேய்ந்து விட்டதாக கூறுவார்கள்.

இதனால் கடுமையான பாதிப்புகள் உள்ளாகுமா? 

எலும்புகள் தேய்ந்து போவதை அதாவது சீரழிவதை நாம் தடுத்துக் கொள்ள பல்வேறு மருத்துவங்கள் இருக்கின்றன, இதனை கடைபிடித்தாலே தேய்ந்த எலும்புகளால் ஏற்படும் பாதிப்புகளை காத்துக்கொள்ள முடியும், சுமாராக ஒரு மாதங்களுக்கு முன் என்னை அணுகிய 27 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கழுத்து வலி வருவதாகவும், தொடர்ந்து என்னால் படிக்கவோ அலுவலக வேலையில் பணியாற்றவே முடியாமல் மிகுந்த சிரமமாக இருப்பதாக கூறிய போது, அவரை எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவரிடம், அனுப்பி முழுமையான காரணத்தை கண்டறிந்த பொழுது MILD CERVICAL SPONDYLOSIS/மைல்டு சேர்வைகல் சபான்டையோலோசிஸ் என்று கூறும் எலும்பு தேய்மானம் இருப்பதை X RAY மூலம் கண்டறிந்தார்,

இளைஞர்களையும் எலும்பு தேய்மானம் தாக்குமா?

கண்டிப்பாக இல்லை, என்பதே என் பதில், கழுத்து வலியின் முக்கிய காரணமான கழுத்தை சுற்றியுள்ள தசைப் பகுதிகளில் வலு குறைவதும் அல்லது இறுக்கமே மிக முக்கிய காரணமாகும், இதனை சரி செய்ய பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கை தேர்ந்த கழுத்து பயற்சிகள் அவர்கள் கூறும் வண்ணம் பயற்சி செய்து வந்தாலே கழுத்து வலியில் இருந்து முழுமையான தீர்வு பெறலாம்,

கழுத்து எலும்பு தட்டு விலகள்

இதனைப் பற்றிய மிகப் பெரிய தனிப்பட்ட விளக்கத்தோடு ஒரு கட்டுரை வரும் காலங்களில் எழுதுகிறேன், கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள GEL போன்ற ஒரு பகுதியை டிஸ்க் என்பார்கள் இது சிலருக்கு இருக்கும் நிலையிலிருந்து விலகி கழுத்தை சுற்றியுள்ள சிறு சிறு நரம்பு வழித்தடங்களை தடை செய்யும் பொழுது கழுத்தை சுற்றியுள்ள பகுதி கை விரல்களில் கடுமையான வலிகளை ஏற்படுத்தும், கழுத்து பகுதியில் தோன்றும் வலி கை விரல்கள் வரை தொடர்ந்து வருவதை உணர முடியும், நரம்புகள் உடல் முழுவதும் பயணித்து தசைகளுக்கும் தோல் பகுதிக்கும் உணர்ச்சிகளை கடத்திக் கொண்டிருக்கும் முக்கிய வேலைகளை செய்து வருவதால், இந்த நரம்புகள் கழுத்துப் பகுதியில் அழுத்தமே அல்லது வழித்தடம் தடைபடும் போது கடுமையான குத்தும் வலி, ஓடுவது போன்ற வலி, கை விரல்கள் தளர்ந்து போகுதல் போன்ற அனைத்துவிதமான அறிகுறிகளும் இருக்கும்.

எலும்புகள் ஏன் தேய்கின்றன?

கழுத்து பகுதி என்பது நம் தலைப் பகுதியையும் நம் உடல் பகுதியும் இணைக்கும் பாலமாகும், இதனை இணைத்து செயல்பட கழுத்து பகுதியில் 7 கழுத்து குருத்தெலும்புகள் இருக்கும், அன்றாடம் இயங்கும் போது நாம் கழுத்து பகுதியை எண்ணற்ற முறையில் இயக்கி கொண்டே இருக்கின்றோம், வயதான பின் இந்த இயக்கும் தளர்ந்து போகும் போது, எலும்புகள் தசைகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் இந்த தேய்மானத்தை உருவாக்க ஏதுவாக அமைந்து விடுகிறது.

- T. செந்தில்குமார்                                                                                                                  பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்                                   ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி                                                                 சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். செல் - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT