வலி தீரும் வழிகள்!

19. காலணிகளுக்கும் கால் வலிக்கும் என்ன உறவு?

டாக்டர் செந்தில்குமார்

தொடர்ந்து வலியை பற்றியே படித்து உங்களுக்கு தொய்வு ஏற்பட்டு இருக்கும். சிறிது வலியில் இருந்து வெளியே வந்து, சில வேறு விஷயங்கள் உங்கள் வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய சிலவற்றைப் பார்க்கலாம். நீங்கள் காலணிக்கும் கால் வலிக்கு சமந்தம் உண்டு என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை.

சிறிது நாட்களுக்கு முன் 38 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மிகுந்த கால் வலி மற்றும் முன் பாதம் வலியோடு எனது மருத்துவமனையை அணுகினார். என்னைப் பொருத்தவரை நேரடியாக மருத்துவம் செய்வதை விட வலியின் காரணங்களை கண்டுபிடிக்க அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். வலியின் காரணத்தை உணர்ந்து அந்த காரணத்தை சரி செய்தாலே வலியின் தீவிரம் பாதி குறைந்து விடும் என்று வலி பற்றிய சிறப்பு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கூறுவார்கள். அதாவது அவர் விற்பனை பிரிவில் பணியில் இருப்பதாகவும் தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தொடர்ந்து கால் உயரம் உள்ள காலணிகளை அணிந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாகவும் கூறினார்.

வலியின் காரணத்தை கண்டுபிடிக்கவே, பல்வேறு கேள்விகளை நான் பாதிக்கபட்டவர்களிடம் கேட்பது வழக்கம். இதையே உங்களுக்கும் தெரிவிக்கிறேன். எந்த வலியாக இருந்தாலும் கண்டிப்பாக காரணம் இருக்கும். காரணம் இல்லாமல் உடம்பில் எந்த வலியோ நோயோ ஏற்படுவதில்லை.

உதாரணமாக முதுகு வலிக்கு முக்கிய காரணம் நாம் உட்காந்து பணி புரியும் இருக்கை அல்லது நாம் உட்காரும் விதம் சரி இல்லாமல் இருப்பதே முதுகு வலி ஏற்பட 80 சதவிகிதம் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. போலவே உடம்பில் ஏற்படும் மூட்டு வலி, முன்பாத வலி, கணுக்கால் வலி போன்றவைக்கு மிக முக்கிய காரணம் நாம் உபயோகிக்கும் செருப்பு 95 சதவிகிதம் காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதாவது நாம் அணியும் காலணிகளில் உள்ள மிருதுத்தன்மை, வளையும் தன்மை, கால் பாதத்தின் அளவும் நீங்கள் அணியும் செருப்பும் சரியாக இருக்கிறதா என்பது போன்ற முக்கியத்தன்மையை பொறுத்தே உங்கள் காலணிகள் நல்லதா கெட்டதா என்று கூற முடியும்.

கடைகளில் கிடைக்கும் செருப்புகள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனது. நீங்கள் வெயிலில் செல்லும் போதோ அல்லது வெப்பம் மிகுந்த தரைகளில் நடக்கும்போதோ, உங்கள் செருப்பில் இருக்கும் வளைவுத்தன்மை கண்டிப்பாக உருமாறும். தோல் பொருட்களால் செய்யப்பட்ட காலணிகள் பெரும்பாலும் 6 மாதத்திலிருந்து 8 மாதத்தில் அதன் ஸ்தரத்தன்மையை இழக்க நேரிடும். அதாவது உங்கள் கால் வடிவத்திற்கு ஏற்றாற் போல் உங்கள் காலணி உருமாறும் போது நீங்கள் உங்கள் காலணிகளை மாற்றி கொள்வது நல்லது. எதிர்காலத்தில் வரும் முன்கால் வலி, கணுக்கால் வலி, மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட வலிகளை தவிர்க்கலாம் குறிப்பாக இளம்பெண்கள் அணியும் உயரம் நிறைந்த பின் கால் காலணிகள் உடம்பில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் போது எதிர்காலத்தில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும். இதனை பற்றி மற்றறொரு கட்டுரையில் தெளிவாக விளக்கி கூறுகிறேன்.

பொதுவாகவே நீங்கள் ஒரு மருத்துவரை மூட்டு வலி, முழங்கால் வலி, கணுக்கால் - குதி கால்கள் வலியின் ஆகிய பிர்ச்னைகளில் அணுகும் போது, அவர் கூறும் முக்கிய அறிவுரை – ’உங்கள் காலணிகளை மாற்றிக் கொள்வது நல்லது, ரப்பரால் செய்யப்பட்ட மிருதுவான காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்’ என்று பரிந்துரைப்பார். நீங்களும் கடைகளில் தேடிப் பிடித்து வாங்கிய அதையே அணியத் தொடங்குவீர்கள். ஒரு வருடத்துக்கு ஒரு முறை சரியான காலணிகள் வாங்கி அணிவதை பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதாவது இதற்கெனவே கடைகளில் கிடைக்கும் சிறப்பான ரப்பரால் செய்ய பட்ட காலணிகளை அணிய பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. கண்டிப்பாக இதனை கண்ணும் கருத்துமாக செய்து வாருங்கள் உங்களுக்கு மூட்டு வலியின் இடமே தெரியாமல் இருப்பதும் உணர முடியும். எல்லா காலணிக் கடைகளில் இச்செருப்புக்கள் கிடைக்கின்றன, நீங்களே சரியானவற்றை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம் இதன் பெயர் MCR/MCP என்று கேட்கவேண்டும்.

தொடரும்...

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT