15.நரம்பு பாதிப்புகள்

சுமார் 38 வயது மதிக்கத்தக்க ரகு சென்னையைச் சேர்ந்தவர், கடந்த 15 வருடமாக ஐடி அலுவலகத்தில்
15.நரம்பு பாதிப்புகள்

சுமார் 38 வயது மதிக்கத்தக்க ரகு சென்னையைச் சேர்ந்தவர், கடந்த 15 வருடமாக ஐடி அலுவலகத்தில் பணி புரியும் ரகு ஓய்வே இல்லாமல் உழைக்கும் நபர். பணி நிமித்தமாக பெங்களூரில் உறைவிடம். கடந்த ஒரு வாரம் முன்பு என்னைச் சந்திப்பதற்கான நேரம் கேட்டு தொலைபேசியில் அழைத்தார். வாருங்கள் சந்திக்கலாம் என்று கூறி தொலைப்பேசியை துண்டிக்க நினைத்த போது பதறி போனவராய் தெரிந்தார், என்ன சொல்லுங்கள் என்றேன். சமீபமாக நான்கு நாட்களுக்கு முன்பு பெங்களூருவிலிருந்து சென்னை பயணம் செய்ய நேரிட்ட போது பயணக் களைப்பில் உடற்சோர்வால், அமரும் இருக்கையில் தனது கணினி பையை தலைக்கு வைத்து படுத்து தூங்கி போய்விட்டாராம். சுமார் 4  மணி நேர மணி நேர ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையிலிருந்து எழுந்த பின் அவரால் தனது இடபக்க கையை அசைக்க முடியவில்லை. அதாவது அவரின் இடது மணிக்கட்டு கை விரல்கள் அவரலால் அசைக்கவோ அல்லது தூக்கவோ முடியவில்லை.

பயணத்தின் போது ஏற்பட்டதால் அருகில் இருந்த சக பயணிகள் உதவியால் சிறிது பயமின்றி பயணத்தை நிறைவு செய்து சென்னையை அடைந்த உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை வேண்டி இருக்கிறார்.

நன்கு பரிசோதித்த அந்த மருத்துவர், உங்களுடைய நரம்பு பாதிப்பு அடைந்துள்ளது. அதனால்தான் உங்கள் கை, மூட்டுக்கு கீழ் இயங்கவில்லை, அதற்கு சரியான விளக்கத்தை கூறி அவரை பிசியோதெரபி மருத்துவம் எடுக்க வேண்டிய கட்டாயத்தை புரிய வைத்து தனது மருத்துவமனையில் பணிபுரியும் பிசியோதெரபி மருத்துவரை அணுக சொல்லி இருக்கிறார். அவரும் பரிசோதித்து விட்டு உங்களுக்கு வந்து இருப்பது நேர்வ் பால்சி (NERVE PALSY) அதாவது உடல் நரம்புகள் பயணிக்கும் பாதையின் வழியே தொடர்ந்து சில மணி நேரங்கள் கடுமையான அழுத்தம் ஏற்படும் போது நரம்புகளுக்கும் தசைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து சில மணி நேரங்கள் ஏற்படும் தற்காலிகமாக உருவான அழுத்தம் தசைகளை சில நாட்கள் செயலிழக்கச் செய்துவிடும். நரம்புகள் செயல் இழக்கும்போது முதலில் பாதிக்கப்படும் உடல் உறுப்பு தசைகள். ஏனென்றால் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தசைகள் மூளையோடு நரம்புகள் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும். இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை சிறப்பாக செயல்பட்டாலும் இயக்கத்தை தசைக்கு கொடுத்து, அதாவது கடத்தி இயக்கத்தை கட்டுப்படுத்தும்.

நரம்புப் பாதைகளில் ஏற்படும் இது போன்ற நீண்ட நேர அழுத்தம் கடுமையான பாதிப்புகளை சில நேரம் ஏற்படுத்தலாம். இருப்பினும் பொதுவாக தற்காலிக பதிப்பாகவே இருக்கும் அதாவது பிசியோதெரபி மருத்துவம் மின்சாரம் கொண்டு நரம்புகளின் இயக்கத்தையும் தசைகளின் இயக்கத்தை மீண்டும் மீண்டும் தூண்டும் போது, பாதிக்கப்பட்ட தசைப் பகுதிகள் மீண்டும் இயங்க தொடங்கும். உடலில் இருக்கும் இயக்கு தசைகளை மூளை தன்னுள்ளே உருவாக்கும் மின்சாரம் மூலம் கட்டுப்படுத்தி கட்டுக்கோப்பாக இயக்குகிறது. ஆனால் இந்த தற்காலிக அழுத்தம் மூளையில் தூண்டப்பட்ட உடன் நரம்புகள் மூலம் இயக்கு தசைகளை இயங்க செய்கிறது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு கொடுத்த மின்சார தூண்டல் சிகிச்சை அதாவது பாதிக்கப்பட்ட தசைகளை இயக்கத்தோடு இயங்க சீரமைத்து தருகிறது.

பிசியோதெரபி சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் பழைய நிலையை அடைந்தார். இது போன்ற பிரச்னைகளின் முக்கிய காரணம் அதிகமாக மது அருந்திவிட்டு, பல மணி நேர போதையில் இருப்பவர்கள் ஒழுங்காக படுத்து உறங்க மாட்டார்கள். அப்படியே அமர்ந்த நிலையில் உறங்கும் போது இது போன்ற நரம்பு அழுத்தத்தால் கை முழுவதுமே அல்லது விரல்கள் மட்டும் பாதிக்கப்படும். மது அருந்துவர்களுக்கு மட்டுமே வரும் என்று நம்பி கொண்டிருந்த மருத்துவ உலகம், சரிவர ஓய்வு எடுக்காமல் இருக்கும் இளைஞர்களையும் தாக்க ஆரம்பித்து இருப்பதை கவனத்தில் கொண்டுள்ளது.

உறக்கம் என்பது ஒரு மனிதனின் முக்கியத் தேவை. உணவு இல்லாமல் கூட நம் உடல் தாக்குப்பிடிக்கும். ஆனால் உறக்கம் இல்லாமல் தொடர்ந்து நம் உடல் பயணிக்கவே பயணிக்காது. 8 மணி நேர இரவு உறக்கம் உங்கள் மூளையை புதுப்பித்து உடலில் சுரக்கும் பல்வேறு நல்ல கெட்ட வேதியல் ரசாயனத்தை சீராக்கி உடலில் ஏற்படும் இது போன்ற பாதிப்புகளை தடுப்பதோடு, முக்கிய உடல் உறுப்புகளை சீரமைத்து செம்மையாக இயங்கச் செய்கிறது. இதனால் ஏற்படும் இருதய நோய், அஜீரணம், மன அழுத்தம், கல்லீரல் பாதிப்புகளை உடனே தடுத்து நிறுத்தி விட முடியும். அதே போல் நடைபயணம், சின்ன சின்ன உடற்பயிற்சிகள் உங்கள் உறக்கத்தை ஆழ்ந்த உறக்கமாக மாற்றுவதோடு உங்கள் ஆயுளையும் நீடிக்க உதவுகிறது.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com