தலை வாருதல் சிரமமாக உள்ளதா? ஃப்ரோசன் ஷோல்டராக இருக்கலாம்

தோள்பட்டை வலியின் மிக முக்கிய காரணங்களில் ஒன்றான ஃப்ரோசன் ஷோல்டர்
தலை வாருதல் சிரமமாக உள்ளதா? ஃப்ரோசன் ஷோல்டராக இருக்கலாம்

தோள்பட்டை வலியின் மிக முக்கிய காரணங்களில் ஒன்றான ஃப்ரோசன் ஷோல்டர் என்ற புரியாத சொற்றொடரை உங்களுக்கு விளக்கவே இந்தப் பகுதி. மிகச் சிறிய வலியுடன் தொடங்கும் தோள்பட்டை வலி மெதுவாக வளர்ந்து மிகக் கடுமையான நிலையை அடையும் போது மொத்த தோள்பட்டையும் இறுகிப்போய் பாதிக்கப்பட்டவர் தனது அன்றாட வேலையை எதுவுமே செய்ய முடியாமல் போகும் நிலையைத் தான் FROZEN SHOULDER (இறுக்கமான தோள்) என்பார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் 2 அல்லது 3 சதவிகிதம் மக்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தோள்பட்டையைச் சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. மருந்து மாத்திரைகளால் சரி செய்து கொள்ள முடியாத இந்த தோள்பட்டை இறுக்கம், பிசியோதெரபி மருத்துவம் மூலம் எளிதில் சரி செய்யப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர் மீண்டும் தனது சகஜ நிலைக்கு திரும்ப உதவும்.

2-லிருந்து 5 சதவிகித அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் தோள்பட்டை இறுக்கம், 10 லிருந்து 30 சதவிகிதம் அதிகமாக சக்கரை நோயாளிகளை பாதிப்பதாக  ஆய்வுகள் கூறுகின்றன. சக்கரை நோயால் பாதிக்க பட்டவர்கள் ஃப்ரோசன் தோள்பட்டை தாங்க இயலாத அளவிற்கு வலியை ஏற்படுத்தும் போது மருத்துவர்களை நாடுவது வழக்கம். மெல்ல மெல்ல தோள் மூட்டின் இயக்கங்களை பாதித்தபின் கடைசி கட்ட நிலையில் அன்றாடம் செய்யும் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும்.

ப்ரோசன் ஷோல்டர் பாதிப்பால் ஏற்படும் சிரமமங்கள்

  • தலை வாரும் போது கடுமையான வலி  
  • காலை கடன் கழிக்கும் பொழுது கையை பின் புறம் கொண்டு செல்வதில் சிரமம்
  • சட்டை அணிவதில் சிரமம்
  • சட்டைக்கு பட்டன் அணிதல் சிரமம்
  • பெண்களுக்கு ஜாக்கெட் பட்டன் (பின்) அணிவதில் சிரமம்
  • பெல்ட் அணிவதில் சிரமம்
  • கையை உயர்த்தி செய்யும் பணிகளின் போது கடுமையான மூட்டு வலி
  • கையை பின் புறம் எடுத்து செல்வதில் சிரமம் மற்றும் கடுமையான வலி

மேலே கூறிய சிரமங்கள் இருப்பின் அருகிலுள்ள மூட்டு சிறப்பு சிகிச்சை மருத்துவரையோ அல்லது பிசியோதெரபி மருத்துவரையோ அணுகி மருத்துவம் எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் தசை தனது வேலையை செய்யாமல் போகும்போது அதன் செயல் திறன் குறைந்து கொண்டே வரும் போது தோள்பட்டை இயக்கம் முழுவதும் பாதிக்கப்படும். இதனையே மருத்துவர்கள் ப்ரோசன் ஷோல்டர் என்பார்கள்.

பொதுவாக தோன்றும் வினாக்களுக்கு இங்கே விளக்கம் தர விழைகிறேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்களை ப்ரோசன் ஷோல்டர் ஏன் அதிகம்  பாதிக்கிறது?

சர்க்கரை நோயாளிகளை மட்டுமே அதிகம் பாதிக்க காரணம் என்னவென்று இன்னும் அறியப்படவில்லை, இருப்பினும் உடலில் உள்ள அதிகபடியான சர்க்கரை எரியும் பொழுது வெளி வரும் வேதியல் மாற்ற கழிவுகள் தோள் பட்டையை சுற்றியுள்ள ஜவ்வு பகுதிகளில் போய் தங்குவதே காரணமாக இருக்கலாம் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யாரை ப்ரோசன் ஷோல்டர் அதிகம் தாக்கும்?

இதுவரை அதிகப்படியாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தாக்குவதாகும், சக்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வாழ் நாளில் ஒரு முறையேனும் தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

சர்க்கரை நோய் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளாத போது தோள்பட்டையின் இரு பக்கமும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

குணப்படுத்த முடியமா?

முற்றிலும் குணப்படுத்தக் கூடிய பாதிப்பு, வலி நிவாரண பக்க விளைவுகள் இல்லாத பிசியோதெரபி மருத்துவம் அதோடு கூடிய தகுந்த பிசியோதெரபி மருத்துவர்களை வைத்து அளிக்க படும் வலி நிவாரண மற்றும் மூட்டு இயக்க சிறப்பு பயற்சிகளால் 100% குணமடையாலாம்.

இத்தொடரில் ஃப்ரோசன் ஷோல்டர் பாதிக்கும் போது செய்யும் சில எளிய பயற்சிகளை உங்களுக்கு விளக்குகிறேன்.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com