5. குறுஞ்செய்தியும் கழுத்து வலியும்

கணிப்பொறி மட்டுமல்ல கழுத்து வலியின் இன்னொரு முக்கிய காரணம், உங்கள்
5. குறுஞ்செய்தியும் கழுத்து வலியும்

கணிப்பொறி மட்டுமல்ல கழுத்து வலியின் இன்னொரு முக்கிய காரணம், செல்போன்கள். தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகள் அதிகம் உபயோகிக்கும் பலர் சமீபகாலமாக கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். Gadgets / மொபைல் போதும் நம் அன்றாட வாழ்க்கையை நடத்தி விடலாம் என்று போன் உள்ளேயே மூழ்கி இருக்கும் உங்களுக்கு ஓர் அலாரம் இந்த புதிய மருத்துவ வார்த்தை TEXT NECK SYNDROME. இதனை பற்றிய தொடர் விளக்கம் அதன் விளைவுகள் எதனால் வருகிறது ஏன் இந்த வார்த்தை பயன்பாடு போன்ற விளக்கங்களை தெளிவாக எடுத்துரைக்கவே இந்தப் பகுதி.

சுமார் பத்து வருடங்களுக்கு முன் கழுத்து வலி வருகிறது என்றால் மருத்துவர் உங்களுக்கு கழுத்து எலும்பு தேய்மானமாகிவிட்டது. அதனால் கழுத்து பட்டை ஒரு ஆறு மாதம் அணிந்திருங்கள் என்று சொல்லி சில மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிடுவார். ஆனால் சமீபகாலமாக கழுத்து வலி முதியர்வர்களுக்கு மட்டும் வரமால், நடுத்தர மற்றும் இளம் பருவ ஆண் பெண் என்றும் அனைவருக்கும் வருவதை காண நேரிடுகிறது. இதற்கான முக்கிய காரணம் கழுத்தை தொங்க போட்டு கொண்டு செல்போன் அல்லது கையிலிருக்கும் ஏதோயொரு நவீன தொழில்நுட்ப சாதனத்தில் விளையாடுவது அல்லது குறிஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பதுதான். இதன் விளைவு இளம் வயதிலேயே கழுத்து வலியில் அவதிப்பட்டு பிசியோதெரபி மருத்துவம் எடுத்துக் கொள்ள வருகிறார்கள்.

சுமாராக நான்கு கிலோ எடை கொண்ட உங்கள் கழுத்து பகுதியை ஏழு குருத்தெலும்புகள் மிகவும் சிறியவை, தாங்கிக் கொண்டிருக்கிறது. நம் முந்தைய தலைமுறை தலையில் பாரத்தை சுமந்தே நெடுந்தூரம் பயணிப்பர். ஆனால் அவர்களை தாக்காத இந்த இந்த கழுத்து வலி நமக்கு ஏனென்றால் கேட்கலாம் அதற்கான பதில் உணவு மற்றும் வாழக்கை முறையில் ஏற்பட்ட மாற்றமேயாகும்.

நான்கு கிலோவை தாங்கிக் கொள்ளும் உங்கள் கழுத்து எலும்புகளை, நீங்கள் கழுத்தை சுமாராக 15 பாகை கோணத்தில் உங்கள் செல்போனை வைத்து பார்க்கும்போது சுமாராக 12 கிலோ பாரத்தை உங்கள் கழுத்து எலும்புக்கு தாங்கிக்கொள்ள பணிக்கிறோம், அதோ போல் 30 பாகை கோணத்தில் 17 கிலோ பாரத்தையும், 45 பாகை கோணத்தில் பார்க்கும்பொழுது 22 கிலோ பாரத்தையும், 60  பாகை கோணத்தில் காணும்போது மிக அதிகமாக 27  கிலோ பாரத்தை உங்கள் கழுத்து எலும்புகள் தாங்கிக்கொள்ள நேரிடும். இந்த கழுத்து வலி ஒருநாள் மாற்றத்தால் நேரிடுவதல்ல, தொடர்ந்து குறிஞ்ச்செயலி அனுப்பிக்கொண்டே இருக்கும் பெரும்பாலானவர்களை இது தாக்க நேரிடலாம்.

இதனால் கழுத்து எலும்பு கொடுக்கப்படும் அழுத்தம் அதனை சுற்றியுள்ள ஜவ்வு பகுதிகளுக்கும், தசை பகுதிகளுக்கும் பகிரப்படும், நாள்பட நாள்பட இந்த அழுத்தம் தசை பகுதிகளை தளர்வடையைச் செய்து விடுவதால், FATIGUE கழுத்து எலும்புகள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் அழுத்தம் நமக்கு வலியாக தெரிகிறது, தொடர்விளைவாக கழுத்தை சுற்றியுள்ள தசைகள் இறுகி போவதால்(NECK SPASM) நீங்கள் கழுத்தில் செய்யும் எல்லாம் இயக்கங்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்த நேரிடும். முக்கியமாக சிலர் முழு திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களை அனைத்தும் தனது செல்போனிலேயே பார்த்துக் கொண்டிருக்க நேரிடும் சிலருக்கு கழுத்து வலியால் வெகுவிரைவில் பாதிக்கபட நேரிடலாம்.

gadgets  மூலம் ஏற்படும் இந்த கழுத்து வலியை தடுக்க என்ன செய்யவேண்டும் என்றால் மேலே படத்தில் காணும் வகையில் உங்கள் செல்போன் அல்லது ஏதேனும் இன்னும்பிற தகவல் சாதனத்தை கழுத்தை குனிந்து நெடு நேரம் நோக்கி கொண்டு இருக்காமல் உங்கள் செல்போனை உங்கள் கண் நேராக பார்க்கும் வகையில் உயர்த்தி பிடித்து உபயோகிக்க பழகுவது சாலச்சிறந்தது. இந்த முதல் கட்ட தடுக்கும் வழி முறையை கையாண்டால் இளமையில் ஏற்படும் கழுத்து வலியை எளிதில் தடுப்பதோடு, நெடுங்காலம் நம் செல்போன்களை சிரமம் இல்லாமல் ஏதுவாக உபயோகிக்கலாம்.

- T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com