13. தோள்பட்டை வலியும் அதற்கான தீர்வும்

கழுத்து வலி பற்றிய தொடர் கட்டுரைகள் உங்களுக்கு தேவையான விளக்கங்களையும்
13. தோள்பட்டை வலியும் அதற்கான தீர்வும்

கழுத்து வலி பற்றிய தொடர் கட்டுரைகள் உங்களுக்கு தேவையான விளக்கங்களையும் ஐயங்களையும் ஓரளவுக்கு புரிய வைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு அடுத்து தோள் பட்டை வலி பற்றி விளக்குகிறேன்.

உங்கள் தோள்பட்டையில் பந்து கிண்ண மூட்டு என்ற வடிமைப்பை கொண்டுள்ளது. அதாவது உங்கள் மேல் கை எலும்பு பந்து போன்ற அமைப்பை கொண்டுள்ளது. முன் கை எலும்பான ஹுமேருஸ்(HUMERUS) பந்து போன்ற அமைப்பு உடலின் எலும்பு பகுதியோடு இணைந்து பந்து கிண்ண மூட்டு அமைப்பை உருவாக்குகிறது. இந்த மூட்டு பகுதியை சுற்றியுள்ள மிக மிருதுவான ஜவ்வு போன்ற பகுதியை காப்சுள் (capsule) என்று ஆங்கில மருத்துவத்தில் கூறுவார்கள். இந்த மிருதுவான ஜவ்வு போன்ற பகுதி சில நேரங்களில் நாம் செய்யும் பணியின் போது ஏற்படும் காயங்களால் தனது இலகுவான நிலையிலிருந்து இறுகிப் போவதால் மூட்டின் இயங்கு தன்மை பாதிக்கப்படும். பொதுவாக அன்றாடம் செய்யும் பணியின்போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கிக் கொள்ள ஏதுவாகவே இது வடிவமைக்கபட்டிருக்கும்.

ஆனால் சில நேரம் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களால் இந்த ஜவ்வு பகுதியில் கடுமையான காயங்கள் பந்துகிண்ண மூட்டின் இயக்கத்தை பாதிப்பதுடன், தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தும். வலியின் அளவை கூட தாங்கிக்கொள்ளும் சிலர் மூட்டின் இயக்கம் பாதிக்கப்படுவதை உணர்ந்து மருத்துவர்களிடம் செல்வார்கள். அவர் கூறும் ஆய்வுகளில் ஒன்றான MRI ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் போது அந்த ஜவ்வு போன்ற பகுதியில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதை காண முடியும்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க கட்டிடக்கலை வல்லுநர் ஒருவர் கடுமையான தோள் பட்டை வலியோடு என்னை அணுகினார். அவரை பரிசோதித்த போது கல்யாண மண்டபம் ஒன்றில் கை கழுவும் இடத்தில் திடீரென கால் இடறி விழ போக எத்தனித்த போது, தனது கைப் பகுதியால் கடுமையாக தாங்கி பிடிக்க முயன்றுள்ளார். அப்போது தோள் பட்டையில் கிளிக் என்று ஒரு சத்தம் கேட்டதாம். அதன் பின்பு அவரால் தனது கையை உயர்த்தி சிறு வேலையை கூடச் செய்ய முடியவில்லை என்றார். அப்படிச் செய்ய முயன்றால், கடுமையான் வலி தனது தோள்பட்டையில் ஏற்படுவதாக கூறினார்.

சிறு சிறு பிசியோதெரபி மருத்துவ பரிசோதனை செய்த பின் அவரின் ஜவ்வு போன்ற பகுதியில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டு இருப்பதும் அதனால் இரண்டு எலும்புகளுக்கும் இடைய இருக்கும் இடைவெளி குறைந்து போனதும் அறிய முடிந்தது. இதனால் அவரின் பொதுவான இயக்கச் செயல்பாடுகள், அதாவது கையில் சிறிய அளவு எடையை தூக்கினாலும் கடுமையான வலி வருவதும், கை நடுக்கம் வருவதும் உணர முடிந்தது.  அதனை தொடர்ந்து கைகளை தலைக்கு மேல் தூக்கும் எந்த பணியையும் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்குப் பின் என்னிடம் வந்த அவரிடம் சிகிச்சையுடன் கவுன்சிலிங்கும் செய்து அனுப்பி வைத்தேன்.

தோள் பட்டை மூட்டு மிகவும் முக்கியமான பகுதியாகும், ஒருவரது அன்றாட வேலைகளான குளித்தல், உடை அணிதல், காலைக் கடன் கழித்தல் போன்ற வேலைகளைச் செய்யும் போது தோள் பட்டை உடல் எலும்போடு இணைந்து தனது வேலைகளை தானே செய்து கொள்ள உதவும். தோள் மூட்டில் ஏற்படும் இந்த ஜவ்வு காயங்கள் இந்த தனிபட்ட வேலைகளை தானே செய்து கொள்ளும் ஆற்றலை குறைப்பதோடு கடுமையான வலியையும் ஏற்படுத்திவிடும். 

வலியின் காரணம் அறிந்து மருத்துவம் அளித்தபின் அவருக்கு பரிந்துரைக்கப்படும் எளிய உடற்பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நலம் பெறுவார் என்பது கண்கூடான உண்மை.

T. செந்தில்குமார், பிசியோதெரபி மருத்துவர், 
கல்லூரி விரிவுரையாளர்,ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,
சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். அலைபேசி - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com