கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் உள்ள பழம் இது!

குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.
கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் உள்ள பழம் இது!
  • பேரீச்சம்பழம்  உண்டதும்  உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது.
  • குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.
  • பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது.
  • பேரீச்சையில் வைட்டமின்  ஏ  அதிக அளவில் உள்ளது. இது கண்  பார்வைக்கும்,  குடல்  ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
  • குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை.
  • பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை  உற்பத்தி  செய்கிறது.
  • சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும்.  அவர்கள் தொடந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன்  கிடைக்கும்.  
  • சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை  அறுத்து வெளியேற்றும்.
  • எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம்  உண்பது நல்லது.
  • உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்.
  • விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும்  சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து பாலில் சேர்த்துக்  குடித்து வந்தால் மலச்சிக்கல்  தீரும் எடைக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com