உணவே மருந்து

டைமுக்கு சாப்பிடுங்க! டைம் டேபிள் போட்டும் சாப்பிடுங்க! உங்கள் அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் இவை!

சினேகா

நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு அக்கறை காட்டினால், ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும்.  காலை முதல் இரவு வரை நம்மை சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க இந்த அட்டவணையைப் பின்பற்றிப் பாருங்கள்.  ஒரு மாதம் அல்லது குறைந்தது ஒரு வாரமாவது இந்த உணவு முறையை முயற்சித்துப் பாருங்களேன்.

இப்படி, ஒரு வாரம் / மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது.  சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.  

இனி, உற்சாகம் உங்கள் கையில்...

காலை  5 .30 மணிக்கு : தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.

காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்  கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.  

காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேக வைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட்.  இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். ஆவியில் வேக வைத்த சிறு தானியம் ஏதேனும் சாப்பிட்டால் வயிறை மிதமாக வைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT