உணவே மருந்து

உங்கள் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களின் பட்டியல் இதோ! 

கோவை பாலகிருஷ்ணன்

பழங்களை உண்டால் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை சாப்பிட்டால் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. எந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு அதன்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்!

எலுமிச்சம் பழம்

தினமும் எலுமிச்சம் பழச் சாற்றினை நீருடன் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பருகி வர உடல் சூடு குறையும். முகம் பொலிவு பெரும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளிப்பது, பற்களை வலுவாக்குகிறது. ஈறுகளை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. எழுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்து முழுமையாக உள்ளது.

வாழைப்பழம்: 

பழங்களில் வாழைப் பழத்திற்கென்றே பல தனித்துவமான சிறப்புக்கள் உள்ளன. மஞ்சள் வாழை மலச்சிகளை போக்க வல்லது. செவ்வாழைப்பழம் கல்லிரல் வீக்கத்தை குறைப்பதுடன் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை போக்குகிறது. பச்சை வாழைப்பழம் உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. ரஸ்தாளி, கண் நோய்களை குணமாக்குகிறது. உடலை வலுப்படுத்துகிறது. கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. நேந்திரன் பழம் இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்கச் சிறந்தது.

பப்பாளிப்பழம்: 

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. மிகச் சிறந்த சத்துள்ள உணவான பப்பாளியினை தினசரி 100 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவு பெரும். ரத்தசோகை, மலச்சிக்கல், போன்றவற்றை அறவே நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கவும் இப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழம்: 

வைட்டமின் சி சத்து உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அன்னாசிப்பழம்: 

அன்னாசிப்பழம் பல விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. கண்பார்வை குறைப்பட்டினை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்குகிறது.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிஞர் தமிழ்ஒளி!

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT